PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தொற்றா நோய்கள்
ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவ முடியாத நோய்கள் தொற்றா நோய்கள் எனப்படும்.
முதலில், எவ்வகை நோய்கள் தொற்றும் எவ்வகை நோய்கள் தொற்றாதவை என்பதை நாம் தெளிவாகக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
 
தொற்றா நோய்கள் நோயுற்ற நபர்களிடமிருந்து மற்றவர்களுக்குப்  பரவுவதில்லை. இந்த நோய்களில் பெரும்பாலானவை ஊட்டச்சத்துக்  குறைபாடுகளால் ஏற்படுகின்றன. அவை ஒருபோதும் கிருமிகள், பாக்டீரியாக்கள் அல்லது உடலைப் பாதிக்கும் பிற உயிரினங்களால் ஏற்படுவதில்லை.

நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் நுண்ணுயிர் எதிர் பொருள்கள் மற்றும் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் மருந்துகள் தொற்றா நோய்களைக்  குணப்படுத்த முடியாது.
Example:
நீரிழிவு, புற்றுநோய், இதய நோய்கள், உடல் பருமன், மூட்டுவலி, ஹீமோபிலியா, மராஸ்மஸ் மற்றும் குவாஷியோர்கர்
தடுப்பூசி
 
தடுப்பூசி என்பது நோய் தடுப்பாற்றலை ஒரு குறிப்பிட்ட நோய்க்கெதிராக உருவாக்கி, அந்த வியாதிக்கெதிராக போராட நம் உடலைத் தயார் செய்வதே தடுப்பூசி போடுவதின் மூல காரணமாகும்.
 
shutterstock_1940659423.jpg
நோய்க் கிருமிகளுக்கு எதிரான தடுப்பூசி
 
நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கக்  குழந்தைப் பருவத்திலேயே BCG (Bacille Calmette-Guerin), MMR (Measles, Mumps and Rubella) மற்றும் போலியோக்கான தடுப்பூசி முன்கூட்டியே போட வேண்டும்.