PDF chapter test TRY NOW

வேகம்-காலம்  வரைபடம்
சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரு பேருந்து செல்வதாக கருதுவோம். அப்பேருந்தின் வேகம் ஒவ்வொரு விநாடிக்கும் அளவிடப்படுகிறது. வேகம் மற்றும் காலம் பதிவு செய்யப்படுகிறது, மேலும் தரவைப் பயன்படுத்தி ஒரு வரைபடம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆறு சாத்தியமான பயணங்களுக்கான முடிவுகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

அ) பேருந்து ஓய்வில்:

காலம் (வி)01 2 3 45
வேகம் (மீ/வி)000000

 

YCIND07062022_3850_Force_and_ motion2_8.png

காலமும் வேகமும் வரைப்படம்

  

இங்கு வேகம் \(0\) மீ/வி என்ற நிலையிலேயே உள்ளது. எனவே, பேருந்து சுழி முடுக்கத்தினைக் கொண்டுள்ளது.

 

ஆ) சீரான வேகத்தில் பயணிக்கும் பேருந்து:

 
காலம் (வி)0123 4 5
வேகம் (மீ/வி)101010101010

 

YCIND07062022_3850_Force_and_ motion2_9.png

காலமும் வேகமும் வரைப்படம்


இங்கு ,பேருந்து \(10 \)மீ /வி என்ற மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வரைபடத்தில், நேர்கோட்டின் சாய்வு சுழி மதிப்பைக் கொண்டுள்ளது. எனவே, இதன் முடுக்கம் சுழியாகும் .

  

இ) சீரான முடுக்கத்தில் பயணிக்கும் பேருந்து:

 

காலம் (வி)012345
வேகம் (மீ/வி)01020304050

 

YCIND07062022_3850_Force_and_ motion2_10.png

காலமும் வேகமும் வரைபடம்


இங்கு, பேருந்தின் வேகம் ஒவ்வொரு விநாடியிலும் \(10\) மீ /வி என்று அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும், வரைபடத்தில் நேர்கோட்டின் சாய்வானது நேர்குறியுடன் மாறாத மதிப்பைக் கொண்டுள்ளது. எனவே, இதன் முடுக்கம் மாறிலியாகும்.

  

ஈ) சீரான வேகத்தில் பயணிக்கும் பேருந்து:

 
காலம் (வி)01 2 3 4 5
வேகம் (மீ/வி)50403020100

YCIND07062022_3850_Force_and_ motion2_11.png

காலமும் வேகமும் வரைபடம்


இங்கு, பேருந்தின் வேகம் ஒவ்வொரு விநாடியிலும் \(10\) மீ / வி என்ற குறைந்து கொண்டே செல்கிறது. வரைபடத்தில், நேர்கோட்டின் சாய்வானது எதிர்குறியுடன் மாறாத மதிப்பைக் கொண்டுள்ளது. எனவே, இதன் முடுக்கம் மாறிலியாகும். இந்த முடுக்கமானது எதிர் முடுக்கம் என அழைக்கப்படுகிறது.

  

உ) அதிகரிக்கும் முடுக்கத்துடன் பயணிக்கும் பேருந்து:

 

காலம் (வி)01 2 3 4 5
வேகம் (மீ/வி)02 8 183250

YCIND07062022_3850_Force_and_ motion2_12.png

காலமும் வேகமும் வரைபடம்

  

இங்கு, பேருந்தின் வேகமானது ஒவ்வொரு விநாடியிலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு சாய்வானது நேர்குறி மதிப்பைக் கொண்டு,அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, இதன் முடுக்கம் அதிகரிக்கிறது.

 

ஊ) குறைந்த முடுக்கத்துடன் பயணிக்கும் பேருந்து:

 

காலம் (வி)
0
1
2
3
4
5
வேகம் (மீ/வி)04580 100 120 125

YCIND07062022_3850_Force_and_ motion2_13.png
காலமும் வேகமும் வரைபடம்

 

இங்கு, பேருந்தின் வேகமானது காலத்தினைப் பொருத்து குறைந்து கொண்டே செல்கிறது. மேலும், சாய்வானது நேர்குறி மதிப்பைக் கொண்டு, குறைந்து கொண்டே செல்கிறது. எனவே, இதன் முடுக்கத்தின் மதிப்பும் குறைந்து கொண்டே செல்கிறது.