PDF chapter test TRY NOW

முடுக்கம்
முடுக்கம் என்பது திசைவேகத்தில் ஏற்படும் மாற்ற விகிதமாகும், என்பதை அறிந்தோம். இதன் பொருள், காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் திசைவேகத்தில் அதிகரிப்பு ஏற்படும் என்பதாகும். முடுக்கம் இரண்டு வகைப்படும். அவை முறையே, 
  • சீரான முடுக்கம்
  • சீரற்ற முடுக்கம்
சீரான முடுக்கம்:
  

ஒரு பொருளின் திசை வேகத்தில் சீரான கால இடைவெளியில் காலத்தினைப் பொருத்து ஏற்படும் மாற்றமானது  (அதிகரித்தல் அல்லது குறைதல்) சீரானதாக இருப்பின் அம்முடுக்கத்தை  சீரான முடுக்கம் எனப்படுகிறது. 

Example:

மரத்திலிருந்து விழும் ஒரு பழத்தின் இயக்கம்

கூரை மீது விழும் மழைத்துளிகளின் இயக்கம்

Rain drop.jpg

மழைத்துளிகளின் இயக்கம்.
சீரற்ற முடுக்கம்:
 
ஒவ்வொரு கால அலகுக்கும் அதன் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் ஒரே மாதிரியாக இல்லாவிட்டால், ஒரு பொருள் சீரற்ற முடுக்கத்திற்கு உட்படுகிறது.
Example:

மாறிவரும் வேகத்துடன் காரின் இயக்கம்

ஒரு பொருளின்  வட்ட பாதை இயக்கம்

Carw234.jpg