PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒவ்வொரு உயிரினத்திற்கும் முதல் பெயர் பேரினத்தைக் குறிப்பதாகவும் இரண்டாவது பெயர் சிற்றினத்தைக் குறிப்பதாகவும் வழங்கி வரும் முறையே இரு சொல் பெயரிடும் முறையாகும்.
  • \(1623\)ஆம் ஆண்டு காஸ்பார்டு பாஹின் என்பவரால் இந்தப் பெயரிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • \(1753\) ஆம் ஆண்டு கரோலஸ் லின்னேயஸ் இம்முறையை செயல்படுத்தினார்.
  • இரு சொற் பெயர் என்றும் மாறாத உலகளாவிய பெயர் ஆகும்.
  • அறிவியல் அறிஞர்கள் புதிய உயிரினங்களை இனம் கண்டு குறிப்பிட்ட படிநிலையில் வைப்பதற்கு இம்முறை மிகவும் பயன்படுகிறது.
இரு சொல் பெயர் எழுதும் முறை:
  1. முதல் சொல் பேரினப் பெயர்,இரண்டாவது சொல் சிற்றினப் பெயர் என்ற வகையில் எழுத வேண்டும்.
  2. ஆங்கிலத்தில் எழுதும் போது பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்தில் எழுத வேண்டும்.
  3. அதேப்போல் ஆங்கிலத்தில் சிற்றினப் பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்தில் எழுத வேண்டும்.
shutterstock_569575726.jpg
வெங்காயம்
 
வெங்காயத்தின் இரு சொல் பெயர் - அல்லியம் சீபா (Allium cepa)
  • பேரினப் பெயர் - அல்லியம் 
  • சிற்றினப் பெயர் - சீபா