PUMPA - THE SMART LEARNING APP
Take a 10 minutes test to understand your learning levels and get personalised training plan!
Download now on Google Playஒரு மளிகைக்கடைக்கு செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.அங்கே கடைக்காரர் பொருட்களை அரிசி, பருப்பு, தானியங்கள், மசாலா பொருட்கள், தினசரி உபயயோகப் பொருட்கள், தின்பண்டங்கள் என தனித்தனியாக அடுக்கி வைத்திருப்பதை நாம் காண முடியும்.
இவ்வாறு பிரித்து முறையாக அடுக்கி வைப்பதால் வாடிக்கையாளர் கேட்கும் பொழுது குழப்பம், தாமதம் இன்றி அவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய உதவுகிறது.இது ஒரு வகைபாட்டியல் முறையாகும்.

மளிகைக் கடையின் அறைகள்
உயிரியல் வகைபாட்டியல்
நாம் வாழும் இவ்வுலகமும் பல்வேறு உயிரினங்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. பல வகையான தாவரங்களையும் விலங்குகளையும் நாம் அறிந்திருப்போம்.
இவ்வாறு கண்டறியப்பட்டு பெயரிடப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கை சுமார் \(8.7\) பில்லியன் ஆகும்.
இத்தகைய உயிரினங்களை அவற்றின் பொதுப்பண்புகள், நடத்தை முறைகளைக் கொண்டு உயிரியல் வல்லுனர்கள் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.அவை

தாவரங்கள்

விலங்குகள்
உயிரினங்களை அவற்றின் பொதுப்பண்புகளின் அடிப்படையில் தொகுத்தல் உயிரியல் வகைப்பாட்டியல் எனப்படும்.