PDF chapter test TRY NOW

பண்புகள்
தாவரங்கள் யூகேரியோட்டுகள் அல்லது பல செல் உயிரிகள் ஆகும்.
  • தாவரங்கள், தற்சார்பு ஊட்டமுறையில்ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிப்பவை.
  • இவைகள் லிப்பிடுகள், எண்ணெய், கொழுப்பு போன்ற வடிவங்களில் உணவை சேமித்து வைக்கின்றன.
  • தாவர செல்கள் ஒளிச்சேர்க்கை நடத்துதல்,பொருட்களைக் கடத்துதல் போன்ற செயல்களைப் புரிய உறுதுணையாக இருக்கின்றன.
Example:
பெரணிகள், ஜிம்னோஸ்பெர்ம்கள், ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
தாவரங்களை இரண்டு பெரும் பிரிவுகளாக உயிரியல் வல்லுனர்கள் வகைப்படுத்தி உள்ளனர். அவை
  • பூவாத் தாவரங்கள்
  • பூக்கும் தாவரங்கள்
பூவாத் தாவரங்கள்
இத்தாவரங்கள் விதைகளை உருவாக்குவது இல்லை, மேலும் இவற்றின் உடல் அமைப்பினைக்கொண்டு மூன்று பிரிவுகளாக மேலும் பகுக்கப்படும். அவை
  • பெரணிகள் - வேர், தண்டு, இலைகள் கொண்டவை. எ.கா. அடியாண்டம்
  • ஆல்காக்கள் - வேர், தண்டு, இலைகள் அற்றவை. எ.கா. காரா
  • மாஸ்கள் - வேர், தண்டு, இலைகள் போன்ற அமைப்பு கொண்டவை.  எ.கா. ஃபியூனேரியா
பூக்கும் தாவரங்கள்
இத்தாவரங்கள் விதைகளை உருவாக்குகின்றன. இவை, இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
  • ஜிம்னோஸ்பெர்ம்கள் - திறந்த விதைத் தாவரங்கள். எ.கா.  பைனஸ் 
  • ஆஞ்சியோஸ்பெர்ம்கள் - மூடிய விதைத் தாவரங்கள். எ.கா. புளி
YCIND20220725_4041_Basis of classification_08.png
தாவரங்களின் வகைப்பாடு