PDF chapter test TRY NOW
இப்பகுதியல் மின்னோட்டத்தினால் உருவாகும் காந்த விளைவின் பயன்கள் மற்றும் மின்னோட்டத்தின் வேதி விளைவு பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
- மின்னோட்டங்களின் காந்தப் பண்பினால் வலிமையான மின்காந்தங்கள் உருவாக்கப் பயன்படுகின்றன. மின்காந்தங்கள், மருத்துவமனைகளில் கண் காயங்களில் பொதிந்துள்ள எஃகு அல்லது இரும்புத் துகள்களை நீக்கப் பயன்படும்.
- நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்சார மணி, பளு தூக்கி மற்றும் தொலைபேசி போன்ற பல்வேறு சாதனங்களில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன.
நாம் தற்போது மின்னோட்டத்தின் காந்தவியல் விளைவு, எவ்வாறு தொலைப்பேசியில் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
தொலைப்பேசி
தொலைப்பேசி:
தொலைப்பேசி செயல்படும் தத்துவம்
- தொலைப்பேசிகளில், மாறும் காந்த விளைவானது ஒரு மெல்லிய உலோகத்தாளை அதாவது டையபார்மை அதிர்வூர செய்கிறது .
- பொதுவாக டையபார்ம்கள், காந்தங்களால் ஈர்க்கக்கூடிய ஒரு உலோகத்தால் உருவாக்கப்பட்டு இருக்கும்.
- தொலைப்பேசியின் கேட்பானில் பொருத்தப்பட்டுள்ள கம்பிச்சுருளுடன் டையபார்ம் உடன் இணைக்கப்பட்டு இருக்கும்..
- கம்பிகள் வழியே மின்னோட்டம் பாயும் போது மென்மையான இரும்புப் பட்டையானது ஒரு மின்காந்தமாக மாற்றம் அடையும்.
- டையபார்மானது மின்காந்தத்தால் ஈர்க்கப்படும்.
- மறுமுனையில் உள்ள நபர் பேசும் போது பேசுபவரின் குரலானது மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மாற்றமுறச் செய்கின்றன.
- இந்த மாற்றம் கேட்பானில் உள்ள டையபார்மை அதிர்வுறச் செய்து ஒலியை உண்டாக்குகின்றன.
மின்னோட்டத்தின் வேதிவிளைவு:
மின்னோட்டத்தின் வேதி விளைவு
வேறுபட்ட கடத்துத் திறன் கொண்ட திரவங்கள் வழியே, மின்னோட்டம் பாயும் போது அவை வேதிவினைகளை ஏற்படுத்துகின்றன. இந்த நிகழ்விற்கு மின்னோட்டத்தின் வேதி விளைவு என்று பெயர்.