PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு வாயுவில் உள்ள மூலக்கூறுகள் குளிர்வடையும் பொழுது அதன் ஆவி சுருங்கி நீர்மமாகிறது இவ்வாறு வாயு நிலையினைச் சுருக்கி நீர்மமாக்கும் நிகழ்விற்கு ஆவி சுருங்குதல் என்று பெயர்.
ஆவி சுருங்கிய பின் கிடைக்கும் திரவத்தினை வெப்பப்படுத்தி மீண்டும் ஆவியாக மாற்ற இயலும் எனவே ஆவி சுருங்குதல் என்ற நிகழ்வு இயற்பியல் மாற்றம் ஆகும். இந்நிகழ்வில், வாயு நிலையில் உள்ள மூலக்கூறுகளின் அமைப்பு வேறு மாதிரியும் திரவ நிலையில் உள்ள மூலக்கூறுகளின் அமைப்பு வேறு மாதிரியும் இருக்கும்.
 
dissssssssw1024.jpg
நீராவிகள் குளிர்ந்து ஒரு திரவத்தை உருவாக்குகிறது
  
shutterstock1046618047.jpg
ஆவி சுருங்குதல்
Example:
சமைத்த உணவுப் பதார்த்தங்களை மூடியுள்ள தட்டுக்களை அகற்றும் போது அதன் உட்பகுதி முழுவதும் நீர்த் திவலைகள் காணப்படும். சூடான உணவில் இருந்து நீராவி வெளியேறி மேலே எழுகிறது. அவ்வுணவினை மூடிய தட்டானது சூடான உணவினை விட குறைவான வெப்பநிலையில் இருக்கிறது. அதனால் சூடான நீராவி மூலக்கூறுகள், குளிர்ந்த தட்டில் மோதும்பொழுது தனது சக்தியை இழக்கிறது; அதனால் அவற்றின் வேகமும் குறைகிறது. அதனால் நீராவி மூலக்கூறுகள் ஒன்றையொன்று ஈர்த்து, நெருங்கி வருகிறது. இறுதியாக நீராவி மூலக்கூறுகள் இணைந்து நீராகிறது.
condensatekondensātsконденсат.png
நீராவி நீராகிறது
  
வாயுகுளிர்வித்தல்திரவம்
 
திரவம்வெப்பப்படுத்துதல்வாயு
ஒரு வாயுவினை குளிர்வித்து நீர்மமாக்கும் நிகழ்விற்கு ஆவி சுருங்குதல் என்று பெயர்.