PDF chapter test TRY NOW
அறிமுகம்
நம்மைச் சுற்றி உள்ள எல்லாம் நேரங்களிலும் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும். மாற்றம் என்பது ஒரு பொருளின் இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றமாகவோ அல்லது அப்பொருளின் வேதிப்பண்புகளில் ஏற்படும் மாற்றமாகவோ இருக்கலாம்.
இயற்பியல் மாற்றம்
பனிக்கட்டியை வெப்பப்படுத்தும் பொழுது பனிக்கட்டி உருகுகிறது; இதில் திண்ம நிலை உள்ள பனிக்கட்டி திரவ நிலைக்கு மாறுகிறது. இம்மாற்றம் பொருளின் இயற்பியல் நிலையில் ஏற்படும் எனவே இது இயற்பியல் மாற்றமாகும்.
நீரினை வெப்பப்படுத்தும் பொழுது அது மேலும் மேலும் சூடாகி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீராவியாக மாறுகிறது. எனினும், அது நீர் என்ற பொருளாகவே திரவ நிலையிலும், வாயு நிலையிலும் இருக்கிறது. இவ்வாறாக புதிய பொருள் எதனையும் உருவாக்காமல், நீரின் பருமனில் மட்டுமே ஏற்படும் மாற்றம் இயற்பியல் மாற்றமாகும்.
Example:
பனிக்கட்டி உருகுதல், நீரினை வெப்பப்படுத்தல், சர்க்கரை நீரில் கரைதல், மரக்கட்டையினை வெட்டுதல், மணலினையும் நீரினையும் கலத்தல், தகரம் நசுங்குதல், வண்ண பட்டன்கள்.
பனிக்கட்டிஉருகுதல்
நீராவி
வேதியியல் மாற்றம்
இரும்பாலான பொருள்களை ஈரப்பதமான இடங்களில் வைக்கும் போது, அப்பொருள்களின் மேல் புதிய செம்பழுப்பு நிற பொருள்கள் உருவாகியிருப்பதைக் காணலாம். இம்மாற்றத்தில் துரு என்ற புதிய பொருள் உருவானதால், இரும்பு பொருள்கள் நிறம், அமைப்பு மற்றும் நிலை ஆகியவற்றில் மாற்றம் அடைந்துள்ளது. இம்மாற்றம் பொருளின் வேதியியல் தன்மையில் ஏற்படும் எனவே இது வேதியியல் மாற்றமாகும்.
காகிதத்தை எரிக்கும் பொழுது, காகிதம் கார்பன் டை ஆக்ஸைடாகவும் வேறு சில பொருள்களாகவும் மாறுகிறது. மீண்டும் அந்த காகிதத்தை பெற இயலாது. இவ்வாறாக, பொருளின் வேதியியல் இயைபில் ஏற்படும் மாற்றம் வேதியியல் மாற்றமாகும்.
Example:
இரும்பு துருப்பிடித்தல், காகிதம் எரிதல், உணவு செரித்தல், முட்டை வேகவைத்தல், வாழைப்பழம் அழுகுதல், கட்டை எரிதல், சர்க்கரை எரிதல்.
இரும்பு துருப்பிடித்தல்
காகிதம் எரிதல்
இயற்பியல் நிலையின் அடிப்படையில் பருப்பொருள்கள் திண்மம், திரவம் மற்றும் வாயு என மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதை நாம் ஆறாம் வகுப்பில் படித்தது நினைவிலிருக்கும். பருப்பொருள்கள் சிறு துகள்களால் ஆனது என்றும், துகள்கள் தொடர்ச்சியாக ஒழுங்கற்ற இயக்கத்தில் ஈடுபட்டு வரும் என்பதையும் நாம் அறிவோம். திண்மம், திரவம் மற்றும் வாயுக்களின் பண்புகளை தற்போது சுருக்கமாகப் பார்க்கலாம்.
அழுத்தம் கொடுத்தல், வெப்பப்படுத்துதல் போன்ற காரணங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ ஒரு பொருளில் அமைந்துள்ள துகள்களின் அமைப்பு மாறுபடுவது என்பது அந்தப் பொருள் இயற்பியல் மாற்றம் அடைவதாகும். பொருள்களை வெப்பப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை தற்போது பார்ப்போம்.
பருப்பொருள்களின் (திட, திரவ, வாயு ) நிலைகள்