PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இப்பகுதியில் வெப்பம் மற்றும் வெப்பநிலை பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
 
நீங்கள் இதை கவனித்தது உண்டா?
 
நம்மை சுற்றி உள்ள சுற்றுப்புறம் குளிர்ச்சியாக  இருக்கும் போது நமது உடல் குளிரால் நடுங்குகிறது. அதே சமயம் வெளிப்புறம் வெப்பமாக இருக்கும் போது நமக்கு வியர்க்கிறது.  
 
இது ஏன்?
 
shutterstock1086853274w3001w1024.jpg
வெப்பம் - வியர்த்தல்
 
நமது அன்றாட வாழ்வின் பல நிகழ்வுகளில் வெப்பநிலையானது முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக நமது உடல் இயக்க செயல்பாடுகள், காலநிலை மற்றும் உணவு சமைத்தல் போன்ற பல நிகழ்வுகள் வெப்பநிலையினை பொருத்தே மாற்றம் நிகழ்கிறது. 
 
இந்த குளிர்ச்சியினையும் வெப்பத்தினையும் நாம் எப்படி துல்லியமாக அளவிட முடியும்?  
  
ஒரு பொருள்  வெப்பமாக உள்ளதா அல்லது குளிர்ச்சியாக உள்ளதா என்பதை அளவிடுவது அதன் வெப்பநிலை என்று கருதப்படுகிறது. மேலும்,  இந்த வெப்பநிலையானது ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலின் மதிப்பை சார்ந்தே இருக்கும்.
 
YCIND20220705_3965_Heat and Temprature_01.png
துகள்களின் இயக்கம்
  • வெப்பநிலையானது ஒரு பொருளில் உள்ள அணுக்கள் எவ்வளவு வேகமாக இயங்குகின்றன என்பதை சார்ந்து இருக்கும்.