PDF chapter test TRY NOW
இப்பகுதியில் வெப்பநிலைமானியைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
வெப்பநிலையை அளக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் கருவி வெப்பநிலைமானி ஆகும். பல வகையான வெப்பநிலைமானிகள் காணப்படுகின்றன . அவற்றுள் சில வெப்பநிலைமானிகள் ஒரு குறிப்பிட்ட வகை திரவம் நிரப்பப்பட்ட மெல்லிய கண்ணாடி குழலினைக் கொண்டுள்ளன
வெப்பநிலைமானி
வெப்பநிலைமானியில் என்ன திரவம் நிரப்பப்பட்டு இருக்கும்?
பாதரசம் அல்லது ஆல்கஹால்
ஏன் பாதரசம் அல்லது ஆல்கஹால் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படுகிறது?
- பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலைமானிகளில் பயன்படுகின்றது. ஏனெனில் அவற்றின் வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அவை திரவ நிலையிலேயே தொடர்ந்து காணப்படும்.
- சிறிய அளவில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடும் அத்திரவங்களின் கன அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
- வெப்பநிலைமானியில் உள்ள திரவங்களின் கன அளவில் ஏற்படும் இம்மாற்றத்தினை அளப்பதன் மூலம் நாம் வெப்பநிலையினை அளவிடுகிறோம்.
தேவையான பொருள்கள்:
- பெரிய கண்ணாடி பாட்டில்
- பலூன்
- நூல்
- மெழுகுவர்த்தி
- நீர்
- தாங்கி
செய்முறை:
- ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கண்ணடி பாட்டிலில் சிறிதளவு நீரினால் நிரப்ப வேண்டும்.
- பாட்டிலின் வாய்ப்பகுதியில் பலூனை பொருத்த வேண்டும்.
- அதனை நூலினைக் கொண்டு இறுக பிணைக்க வேண்டும்.
- பாட்டிலை தாங்கியில் பொருத்தி மெழுகுவர்த்தியின் உதவியினால் வெப்பப்படுத்த வேண்டும்.
- பிறகு பாட்டிலினை குளிரவிட வேண்டும்.
பாட்டில் குளிர தொடங்கியவுடன் பலூனில் ஏற்படும் மாற்றம் யாது? ஏன்?
பலூனும் சுருங்குகிறது.
என்ன மாற்றம் நிகழ்கிறது ?
- வாயுக்களை வெப்பப்படுத்தும் போது அவை விரிவடைகின்றது. குளிர்ச்சி அடையச் செய்யும் போது அவை சுருங்குகின்றது.
கோடைக்காலங்களில் வாகனங்களின் டயர்கள் வெடிப்பது ஏன்?
கோடையில் வாகனங்களின் டயர்களில் உள்ள வாயுக்கள் விரிவடைகிறது எனவே தான் டயர்களில் வெடிப்பு ஏற்ப்படுகிறது.
வெப்பப்படுத்திய பிறகு பலூனில் ஏற்படும் மாற்றம் யாது? ஏன்?
வெப்பப்படுத்திய பிறகு பாலூனில் உள்ள வாயுக்கள் விரிவடையும் அதனால் அடர்த்தி குறைந்து பலூன் மேலே செல்கிறது.