PDF chapter test TRY NOW

சைட்டோபிளாசம் - (செல்லின் இயக்க பகுதி அல்லது செல் இயக்கத்தின் பகுதி):
  
வெங்காயத்தின் தோலைச் சிறிது எடுத்து நழுவத்தின் மேல் வைத்துக் கூட்டு நுண்ணோக்கி மூலம் பார்க்கும் பொழுது  அதன் செல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து இருப்பதைத் தெளிவாகக் காண இயலும். செல்கள் ஒவ்வொன்றும் செல் சவ்வின் மூலம் இணைக்கப்பட்டு சிறிது சாயம் ஏறியபடி  இருக்கும் ஓர் பெரிய பகுதியே சைட்டோபிளாசம் எனப்படும்.
 
YCIND202207284066CellBio02.jpg
கூட்டு நுண்ணோக்கி
 
சைட்டோபிளாசம் என்பது செல்லின் அனைத்து பகுதிகளும் அடக்கிய உட்கருவைத் தவிர்த்த பகுதி ஆகும். இது,  சைட்டோசால் மற்றும் செல்லின் நுண்ணுறுப்புகளால் ஆனது. சைட்டோசால் என்பது ஜெல்லி போன்று இருக்கும்இவை \(70\)-\(90\)% நீரால் ஆனது. நிறம் அற்றது.
 
செல்லின் நுண்ணுறுப்புகள் பின்வருமாறு,
  • எண்டோபிளாச வலைப்பின்னல்
  • நுண்குமிழிகள்
  • ரைபோசோம்
  • லைசோசோம்
  • கோல்கை உறுப்புகள்
  • மைட்டோகாண்ட்ரியா
  • சென்டரியோல்
  • பசுங்கணிகம்
  • பிளாஸ்மா சவ்வு
  • செல் சுவர்
YCIND20220804_4064_Cell Biology_14.png
விலங்கு செல்லின் அமைப்பு
 
புரோட்டோபிளாசம் மற்றும்  சைட்டோபிளாசம்:
  • உட்கருவின் உள்ளே மற்றும் வெளியே உள்ள பகுதி புரோட்டோபிளாசம் எனப்படும்.
  • உட்கருவின் உள்ளே உள்ள திரவம் அணுக்கரு திரவம் அல்லது நியூக்ளியோபிளாசம் எனப்படும்.
  • உட்கருவின் வெளியே உள்ள திரவம் சைட்டோபிளாசம் எனப்படும்.