PDF chapter test TRY NOW

கோல்கை உறுப்புகள் - எனக்கு இடைவெளி தேவை:
  • இது ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட சவ்வினால் சூழப்பட்ட சுரப்பி குழல்களாலான ஓர் அமைப்பாகும் .
  • இது நொதிகளைச் சுரக்கவும், உணவைச் செரிமானம் அடையச் செய்யவும், புரதத்தை உணவிலிருந்து பிரித்துப் பிற செல்களுக்கு அனுப்பவும். மேலும் உடலுக்கு வலு சேர்க்கும் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்துகின்றன.
YCIND20220804_4064_Cell Biology_04.png
கோல்கை உறுப்புகள்
 
லைசோசோம் - தற்கொலைப்பை:
  • இவை அளவில் மிகச் சிறியவை எனவே இவற்றை நுண்நோக்கியால் மட்டுமே காண இயலும்.
  • இவை செல்லின் முதன்மையான செரிமான பகுதியாகும்.
  • லைசோசோம் செல்லிலேயே சிதைவடைந்து போவதால் தற்கொலைப்பை என்றும் அழைக்கப்படுகிறது. இவை, செல்லின் பிற பகுதிகளைத் தொடுகின்ற போது, அவை அழிய நேரிடும்.
YCIND20220804_4064_Cell Biology_05.png
லைசோசோம்
 
சென்ட்ரியோல்:
  • உட்கருவிற்கு அருகில் இவை இருக்கும். மேலும், குழாய் போன்ற அமைப்பைக் கொண்டவை.
  • விலங்கு செல்களில் இவை காணப்படும். ஆனால் தாவரச் செல்களில் இவை இருக்காது.
  • இது, செல் பகுப்பின் பொழுது குரோமோசோம்களைப் பிரிக்க உதவுகின்றது.
YCIND20220803_4053_Cell Biology_08.png
சென்ட்ரியோல்