PDF chapter test TRY NOW

மருத்துவமனைக்கோ அல்லது திரை அரங்கிற்கோ அல்லது அதிகமாக போது மக்கள் கூடும் இடங்களில் "தீ" என்று எழுத்து கொண்ட வாலியோ அல்லது தீ அணைப்பானோ வைக்கப்பட்டு இருக்கும்.
 
நீங்கள்  எப்போழுதாவது சிந்தித்தது உண்டா? தீ அணைப்பான் எப்படி வேலை செய்கிறது என்று?
 
shutterstock_644887240.jpg
தீ அணைப்பான்
 
ஒரு தீயணைப்பு கருவியானது காற்று அல்லது எரிபொருளின் வெப்பநிலையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வெப்பம் மேலும் பரவுதலையும் கட்டுப்படுத்துகிறது. பொதுவாகவே, தீயை அணைக்கும் கருவிகள், எரியும் எரிபொருளை குளிர்விக்கிறது. மேலும், ஆக்ஸிஜனை எரிபொருளோடு வினைப் புரியாமல் தடுக்கிறது. அதனால், தான் தொடர்ந்து எரிய முடியாமல் தீ தடுக்கப்படுகிறது.
 
YCIND_220603_3708_8.png
தீ அணைப்பானின் உட்பகுதி
 
மேலே உள்ள படத்தில் உள்ளபடி, தீ அணைப்பானின் கைப்பிடியை அழுத்தும் போது, அது திறந்து, உயர் அழுத்த வாயுக்கள் உள்ளறையில் (canister) பிரதான சிலிண்டரிலிருந்து ஒரு சிப்பான் ( siphon) குழாய் வழியாக வெளியேறி தீயை கட்டுப்படுத்துகிறது. ஒரு தீ அணைப்பான் மருந்து, தெளிப்பான் கருவிபோல செயல்படுகிறது.
 
பல்வேறு வகையான தீ விபத்துக்கள் நிகழ்கிறது அனைத்திற்கும் ஒரே மாதிரியான தீ அணைப்பானை நாம் பயன்படுத்துகிறோமா? அது சாத்தியமா?
 
இல்லை. ஒவ்வொரு தீ விபத்துக்கும் ஒவ்வொரு முறை பயன்படுத்தப்படுகிறது.
 
தீயணைப்பானின் வகைகள்:
 
வெவ்வேறு வகையான அணைப்பான்கள் பல்வேறு வகையான தீயைக் கட்டுப்படுத்துகின்றன. அவற்றில் தீயை அணைக்கும் பொருள்களின் பொதுவான வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • காற்று அழுத்த நீர் அணைப்பான்கள்
  • கார்பன்-டை-ஆக்சைடு அணைப்பான்
  • உலர் ரசாயன தூள் அணைப்பான்கள்
தீயனைப்பான் ஐந்து வகையாக வகைப்படுத்தலாம் அவைகள் முறையே,
  • நீர்
  • நுரை
  • உலர்ந்த வேதித்துகள்கள்
  • கார்பன் டை ஆக்சைடு
  • நீர்ம இரசாயனங்கள்
நெருப்பின் வகுப்புகள் ஐந்து வகையாக வகைப்படுதலாம். அவைகள் முறையே,
  • வகுப்பு \(A\)
  • வகுப்பு \(B\)
  • வகுப்பு \(C\)
  • வகுப்பு \(D\)
  • வகுப்பு \(E\)
வகுப்பு \(A\) :
 
மரம், காகிதம் மற்றும் துணி போன்ற எரியக்கூடிய திடப்பொருட்களால் ஏற்படுகிறது.
 
வகுப்பு \(B\):
 
பெட்ரோல், டர்பெண்டைன் அல்லது பெயிண்ட் போன்ற எரியக்கூடிய திரவப்பொருட்களால் ஏற்படுகிறது.
 
வகுப்பு \(C\):
 
ஹைட்ரஜன், பியூட்டேன் அல்லது மீத்தேன் போன்ற எரியக்கூடிய வாயுப்பொருட்களால் ஏற்படுகிறது.
 
வகுப்பு \(D\):
 
எண்ணெய்யால் ஏற்படும் தீ.
  
வகுப்பு \(E\):
 
மின்சார தீ விபத்துகள் மற்றும் மின்சார உபகரணங்களால் ஏற்படும் தீ மின்சார நெருப்பு மற்றும் மின் உபகரணங்கள் மற்றும் மின் பொருள் அகற்றப்பட்டதும், நெருப்பு வகுப்பை மாற்றுகிறது.