PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமுட்டை என்பது பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டமாகும். பல வகையான பெண் பறவைகள் தங்களின் இளம் உயிரிகளை உருவாக்க முட்டையிடுகிறது.
Example:
கோழி, வாத்து, வான்கோழி, மற்றும் நெருப்புக்கோழிகள்.
இவ்வகையான முட்டைகளை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறோம் அவை பின்வருமாறு:
- உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது. ஏனெனில் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. அதாவது அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) முட்டையில் அடங்கியுள்ளது.
- முட்டையில் புரதம் நிறைந்த ஊட்டச்சத்து உடையது மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது.
- ஒரு முட்டை ஆறு கிராம் எடை கொண்டது அதில் முழுவதும் உயர்ந்தரகப் புரதம் உள்ளது.
- மனிதனுக்கு ஒரு நாளுக்கு தேவையான புரத சத்து முட்டையில் இருக்கிறது இதை தினமும் உணவில் எந்த வயதினரும் எடுக்கும் போது உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
முட்டை
தேன்
தேன் எங்கிருந்து நமக்குக் கிடைக்கிறது? அது எவ்வாறு உருவாகிறது? என்பது தெரியுமா? நீங்கள் தேன் கூட்டில் பல தேனீக்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
தேன் ஓர் இனிப்பான உணவுப்பொருள் ஆகும். இது மருத்துவ குணமும் கொண்டது. தேனீக்கள் பூக்களில் காணப்படும் நெக்டார் என்ற இனிப்பான வழுவழுப்பான திரவத்தைச் சேகரித்து, அதனை தேனீக்கள் தேனாக மாற்றி தேன் கூட்டில் உள்ள தேன் அறைகளில் சேமித்து வைக்கிறது.
தேன்
தேன் கூடு
- தேன் என்பது தேன் கூட்டிலிருந்து மனிதனால் பிரித்தெடுக்கப்படும் இனிப்பான வழுவழுப்பான திரவமாகும்.
- மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களால் அடர்ந்த காடுகளில் காணப்படும் தேன் கூடுகளிலிருந்து இயற்கையான மலைத் தேன் சேகரிக்கப்படுகிறது.
- குளுகோஸ், புரக்டோஸ், நீர், சில என்ஸைம்கள் மற்றும் சில வகை எண்ணெய்கள் ஆகியவை தேனில் அடங்கியுள்ளதால் அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.
- தேன் சிறந்த மருத்துவ குணமிக்கது இதில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர விடுவதில்லை.
தேன் சேகரிக்கும் தேனீக்கள்
வேலைகாரத் தேனீக்களின் பணிகள்:
- மலர்களில் இருக்கும் தேனை சேகரித்தல்
- இளந்தேனீக்களை பாதுகாத்து வளர்த்தல்
- தேன் கூடு சேதம் ஏற்படும் போது அதைச் சரி செய்தல்
- தேன் கூட்டைப் பாதுகாத்தல்
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Eggs_in_basket_2020_G1.jpg/512px-Eggs_in_basket_2020_G1.jpg
https://www.piqsels.com/en/public-domain-photo-sucvm/download
https://www.piqsels.com/en/public-domain-photo-fsgcm
https://www.piqsels.com/en/public-domain-photo-swwhr/download
https://www.piqsels.com/en/public-domain-photo-svbqn/download
https://www.piqsels.com/en/public-domain-photo-jrwfj/download
https://www.piqsels.com/en/public-domain-photo-fiooa/download
https://www.piqsels.com/en/public-domain-photo-jmgeb/download