PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நெகிழிகளின் பயன்பாட்டில் மிகப் பெரும் பிரச்சனை அவை மண்ணில் மட்குவதில்லை. இதனால் அவற்றை முறையாக நீக்கி சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.
 
இயற்கை முறையில் பாக்டிரியாக்களின் செயல்பாட்டால் எந்தப் பொருள் சிதைக்கப்படுகிறதோ, அதற்கு மட்கும் தன்மை கொண்ட பொருள் என்று பெயர்.
 
shutterstock1634799580w300.jpg
மட்கும் பொருட்கள்
  
காய்கறிகளின் புறத்தோல்கள், பழங்கள், மீதமான உணவுப்பொருட்கள் ஆகியவற்றை மண்ணில் இடும் போது அவை பாக்டிரியாவால் சிதைக்கப்பட்டு உரமாகின்றன.
 
நெகிழிகள் இயற்கை முறையில் பாக்டிரியாவால் சிதைக்கப்படுவதில்லை. அதனால் அவற்றை மட்கும்.
 
குப்பைகளிலிருந்து பிரித்து அகற்ற வேண்டும். உலகெங்கிலும் உற்பத்தி செய்யப்பட்டும், பயன்படுத்தப்பட்டும், தூக்கி எரியப்பட்டும் மிக அதிக அளவில் நெகிழி கழிவுகள் குவிந்துள்ளன.
 
நெகிழிக் கழிவுகளிலிருந்து \(79\)% குழிகளில் இட்டு மூடப்படுகிறது அல்லது திறந்த வெளியில் கொட்டப்பட்டு குப்பைமேடாகிறது, \(12\)% எரிக்கப்படுகிறது, \(9\)% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நெகிழிக் குப்பைகளை அகற்ற முயற்சிக்கும் வழிகளுள் ஒன்று \(5R\) - கொள்கை.
  
நெகிழிக் கழிவுகளை அகற்றும் சிறந்த முறைகளில் அதிகபட்ச சாதகமான முறை கிழ்க்கண்டவாறு அமையும்.
 
YCIND_221221_4846_chemistry_2.png
நெகிழிகளை அகற்ற பயன்படும் பிரமிட் வழிமுறை
 
இனி \(5R\) கொள்கையை பற்றி விரிவாக பார்ப்போம்.
  1. \(R\)efuse - தவிர்
  2. \(R\)educe - குறை
  3. \(R\)euse - மீண்டும் பயன்படுத்து
  4. \(R\)ecycle - மறுசுழற்சி செய்
  5. \(R\)ecover - மீட்டெடு
1. மறுத்தல் / தவிர்த்தல் (Refuse)
 
BAGw417.png
நெகிழியை தவிர்  - மீண்டும் மஞ்ச பை
 
நெகிழியால் உருவான பொருட்களை தவிர்ப்பதே மிகச் சிறந்த முறையாகும். அதற்கு கடைக்கு செல்லும் போது வீட்டில் இருந்தே பருத்தி அல்லது சணலால் ஆன பைகளை எடுத்துச் செல்லலாம்.
 
2. குறைத்தல் (Reduce)
 
shutterstock1453632491w300.jpg
வீட்டிலிருந்து துணிப்பை எடுத்துச் செல்லல்
  
நாம் நெகிழி பொருட்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்தால் அதன் மூலம் நெகிழிக் கழிவுகளை குறைக்கலாம்.
 
3. மீண்டும் பயன்படுத்துதல் (Reuse)
 
shutterstock572706859w300.jpg
பயன்படுத்திய நெகிழி பாட்டிலில் செடி வளர்த்தல்
 
நெகிழி பொருட்களை குப்பையில் தூக்கி எரிவதற்கு மாற்றாக அதனை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக பயன்படுத்திய நெகிழிகளை கொண்டு மொட்டை மாடியில் செடிகள் நட்டு வளர்க்கலாம்.
 
4. மறுசுழற்சி செய்தல் (Recycle)
 
shutterstock1484231495w300.jpg
மறுசுழற்சி செய்த உபயோகமான பொருட்கள்
  
ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் இளகும் நெகிழிகளை வகைப்படுத்தி அவற்றினை மறுசுழற்சி செய்து வேறு ஒரு உபயோகமான பெருளாக மாற்றலாம். இது ஒரு நல்ல முறை ஆகும்.
 
5. மீட்டெடுத்தல், மட்குதல் மற்றும் எரித்துச் சாம்பலாக்குதல் (Recover)
 
shutterstock657135958w300.jpg
நெகிழியை எரித்தல்
  
நெகிழிப் பொருள்களை சாம்பலாக்கிகளில் இட்டு உயர் வெப்பநிலைகளில் எரித்து, வெளியாகும் வாயுக்களை சேகரித்தும், மீதமான நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பலை பிரித்தும், மின்சார சக்தி பெறப்படுகிறது.
 
இந்த முறையில் நச்சுத் தன்மை கொண்ட வாயுக்கள் மற்றும் வேதிப்பொருள்களும் சுற்றுசூழலுக்கு ஏற்றது அல்ல. எனவே நெகிழிகளை எரித்தல் என்பது சிறந்த முறையன்று.
 
குழிகளில் இட்டுப் புதைத்தல்:
 
6.png
குப்பையின் அடுக்குகள்
 
நிலங்களில் பெரிய குழிகளை அமைத்து அவற்றுள் நெகிழிக் கழிவுகள் புதைக்கப்படுகிறது. உலக அளவில் இந்த முறை \(7-13\)% பின்பற்றப்படுகிறது. இதனால் வருங்காலங்களில் புதைக்கப்பட்ட நெகிழிகளில் இருந்து வெளியேறும் நச்சுக்கள் சுற்றுப்புறத்தை மாசுப்படுத்தும்.