PDF chapter test TRY NOW

நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு வகையான நெகிழிகளை பயன்படுத்துகிறோம். இவற்றில் சில நெகிழிகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பது நாம் அறிந்ததே. அவ்வாறெனில் நாம் எவ்வாறு நெகிழியின் தன்மையை இனம் காண்பது?
 
ரெசின் குறியீடுகள் நமக்கு நெகிழியை வகைப்படுத்த உதவுகிறது.
 
ரெசின் குறியீடு:
பலவகையான நெகிழிகளை வகைப்படுத்த உலகளாவிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளே ரெசின் குறியீடுகளாகும்.
நெகிழி ரெசின் குறியீடுகளின் அவசியம்:
 
நெகிழிகளை அவற்றின் தன்மையை பொறுத்து பிரித்து, அவற்றை தனித்தனியாக மறுசுழற்சி  செய்ய இந்த வகையான குறியீடுகள் பயன்படுகிறது.
 
நெகிழிப்பொருளில் ரெசின் குறியீடு:
 
OTHERCODETRIw346.png
ரெசின் குறியீடுகள்
 
நெகிழிப் பொருளின் அடிபகுதியிலோ, அல்லது மூடியிலோ, பொருளைத் தாயரித்து விற்பனை செய்பவரின் பெயர்வில்லை ஸ்டிக்கரிலோ ஒன்றையொன்று துரத்தும் அம்புக்குறியாலான முக்கோண உருவத்தின் நடுவில் ஓர் எண் கொடுக்கப்பட்டிருக்கும்.இந்தக் குறயீட்டையே நாம் ரெசின் குறியீடு என்கிறோம்.
 
அந்த எண்ணின் அடிப்படையில் எந்த வகையான நெகிழியால் நெகிழிப்பொருள் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை அறியலாம்.
 
சில நெகிழிப் பொருட்களில் அந்த எண்ணிற்குரிய நெகிழி வகையின் பெயருடைய சுருக்கெழுத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.
 
ரெசின் குறியீடு 01- PET:
 
shutterstock373480477w353.jpg
  
இந்த வகை நெகிழிகள் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேலை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் ஆண்டிமணி என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள் வெளியேறும்.
 
குடிநீர் பாட்டில்கள், குடை, விளையாட்டு உடைகள், கயிறுகள், ஸ்வட்டர்கள் ஆகிய பொருட்களில் இந்த PET வகை நெகிழிகள் காணப்படுகின்றன. 
 
ரெசின் குறியீடு 02 - HDPE:
  
shutterstock428676541w367.jpg
ஷாம்பூ பாட்டில்கள்
 
இந்த வகை நெகிழிகள் மிகவும் பாதுகாப்பானது. ஈரப்பதத்தினை தடை செய்யும் தன்மை வாய்ந்தது. இது மெலிதானது, வலுவானது மற்றும் மறுசுழற்சி செய்யத்தக்கது.
சிமென்ட், அரிசி, மாடுகளின் தீனி வைக்கப்படும் சாக்குகள், மீன்பிடி வலை மற்றும் குண்டு துளைக்காத உள்ளாடைகள் ஆகிய பொருட்களில் HDPE என்ற நெகிழி காணப்படுகின்றன.
 
ரெசின் குறியீடு 03 - PVC:
  
pvcw300.jpg
PVC நீர்க்குழாய்கள்
  
மிகவும் ஆபத்தான நெகிழிப்பொருளாகும். வானிலை மாற்றங்களை எதிர் கொள்ளும் தன்மை உடையது.
 
மழைகுடைகள், மழைகோட்டுகள், காலுறைகள், மீன்பிடி வலைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், போர்வைகள், ஆடைகளின் மேல் ஓட்டும் வில்லைகள், நீர்க்குழாய்கள் மற்றும் போலி தோல் பொருட்கள் தயாரிக்க PVC என்ற நெகிழி பயன்படுகிறது.
 
ரெசின் குறியீடு 04 - LDPE:
 
 shutterstock_522135823.jpg
செயற்கை புற்கள்  
 
இந்த வகை நெகிழியும் பாதுகாப்பானது. இது மென்மையானதும் மற்றும் வலிமையானதும் ஆகும்.
கனரக சாக்குகள், செயற்கை புற்கள் ஆகியவை இந்த LDPEவகை நெகிழி கொண்டு தயாரிக்கப்படுகிறது.
 
ரெசின் குறியீடு 05 - PP:
 
shutterstock_486224893.jpg
டயப்பர்
 
இந்த PP வகை நெகிழிகளும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தப்படும் உறிஞ்சுப்பொருள்கள் தயாரிக்க பயன்படுகிறது. டயபர்கள், தரை கம்பளங்கள், மின்கலத்தின் தடுப்புச் சுவர்கள் மற்றும் கான்கீரிட் வேளைகளில் நுண் இழைகளாக பயன்படுகிறது.
 
ரெசின் குறியீடு 06 - PS:
 
shutterstock66167845w300.jpg
உணவுப்பொருள் கலன்கள்
 
மிகவும் ஆபத்தான நெகிழி. பெரும்பாலும் இந்த வகை நெகிழிகள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி எறியக்கூடிய உணவு மற்றும் திரவ பானங்களின் கலன்களாகவே பயன்படுத்தப்படுகிறது.
 
தேநீர் மற்றும் குளிர்பான குவளைகள், சமலையறை கரண்டிகள் மற்றும் பொம்மைகள் ஆகிய பொருட்களில் PS நெகிழிபன்படுத்தப்படுகிறது.
 
ரெசின் குறியீடு 07 - OTHER:
 
shutterstock276031040w300.jpg
தண்ணீர் கேன்கள்
பாலிகார்பனேட் (PC) அக்ரிலோ நைட்ரில் ப்யூட்டாடையீன் ஸ்டைரீன்  (ABS) அக்ரிலிக்  (AC), உயிரி நெகிழிகள், நைலான், பாலியூரித்தேன்  (PU) மற்றும் பிற.
PC மற்றும் ABS வகை நெகிழிகள் நச்சுப் பொருட்களை கொண்டுள்ளதால் பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது.
 
சிறுவர்களின் பாட்டில்கள், தலைக்கவசங்கள், ஆப்டிகல் கேபிள்கள்,பெயிண்டுகள் மெத்தையின் ஃபோம்கள் ஆகியபொருட்களில்இந்த வகை நெகிழிகள் காணப்படுகின்றன.
 
ரெசின் குறியீடு இல்லாத நெகிழிகள்:
  
இவ்வகை நெகிழி பொருட்கள் ஆபத்தானவையாக கூட இருக்கலாம். இதனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.