PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
படத்தில் காணும் பொருட்கள் அனைத்தும் பள்ளி செல்லும் பொழுது நீங்கள் பயன்படுத்துவதாகும். இவையாவும் எவற்றால் ஆனவை என சிந்தித்ததுண்டா ?
  
shutterstock_509364400.jpg
மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்கள்
 
ஆடைகள், பைகள்  மற்றும் காலணிகள் ஆகியவை பலபடி பொருட்களால் ஆனவை.
 
பலபடி என்ற சொல் ஆங்கிலத்தில் பாலிமர்  (polymer) என்று அழைக்கப்படுகிறது.
பாலிமர் என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும்.
 
polymer = poly + mer
 
poly என்பது "பல" என்றும் mer என்பது "சிறிய அடிப்படை அலகு" என்றும் பொருள்படும்.
 
பலபடி மற்றும் பலபடியாக்கல்:
பல எண்ணிக்கையிலான ஒற்றைப் படிகள் சக பிணைப்புகளால் இணைந்து உருவாக்கப்படும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பே பலபடி எனப்படும். பலபடியை உருவாக்கும் முறைக்கு பலபடியாக்கல் என்று பெயர் .
ஒற்றைப்படிகள் என்பது பெரும்பாலும் எளிய கரிம மூலக்கூறாகும். இது ஒன்றுடன் ஒன்று இணைந்து பலபடியை உருவாக்குகிறது. இது பலபடியின் கட்டுமானத் தொகுதியாக (building block) உள்ளது.
Example:
எத்திலீன், ப்ரோபைலீன், வினைல் குளோரைடு, அமினோ அமிலங்கள் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை சில ஒற்றைபடிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
1.png
பலபடி உருவாதல்
 
எத்தீலீன் என்ற ஒற்றைப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து பாலி எத்தீலீன் என்ற பலபடியை உருவாக்குகிறது.
 
சக பிணைப்பு:
இரு அணுக்கள் தங்களது எலக்ட்ரான்களை சமமாக வழங்கி சமமாக பகிர்ந்து கொள்வதால் சகப்பிணைப்பு உருவாகிறது.
YCIND_221221_4846_chemistry.png
சகப்பிணைப்பின் மூலம் நீர் உருவாதல்
 
இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் தங்களது எலக்ட்ரானை  ஆக்சிஜனுடன் வழங்கி மற்றும் பகிர்ந்து கொள்வதால் சகப்பிணைப்பின் மூலம் நீர் மூலக்கூறு உருவாகிறது.
 
பலபடிகள் சகப்பிணைப்பின் மூலமே நீண்ட சங்கிலியாக உருவாகிறது.
  
நாம் பயன்படுத்தும் நீர்க்குழாய்களான பாலி வினைல் குளோரைடு (PVC) என்ற பலபடி எவ்வாறு உருவாகிறது என்பதை கிழ்கண்ட படத்தின் மூலம் அறியலாம்.
 
2.png
பாலி வினைல் குளோரைடு பலபடி உருவாதல்