LEARNATHON
III

Competition for grade 6 to 10 students! Learn, solve tests and earn prizes!

Learn more

Theory:

வழி அலகுகள் என்பவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை அலகுகளின் கணித கலவையின் மூலம் பெறப்படும் அலகுகளாகும். 

 

மற்ற அனைத்து \(SI\) அலகுகளும் பல்வேறு சேர்க்கைகளில் அடிப்படை அலகுகளை பெருக்குதல், வகுத்தல் அல்லது பன்மடங்கு மதிப்பின் மூலம் பெறப்படுகின்றன.

 

உதாரணத்திற்கு,

  • ஒரு பகுதியின் பரப்பளவை கணக்கிட நீளம் அகலத்தால் பெருக்கப்படுகிறது. அதன் அலகு \(m^2\) ஆகும்.
  • இயந்திர ஆற்றலை கணக்கிட செலுத்தப்பட்ட விசையுடன் நகர்த்தப்படும் தூரம் பெருக்கப்படுகிறது. அதன் அலகு நியூட்டன் மீட்டர் ஆகும்.
  • இது \(Nm\) அல்லது \(J\) என குறிக்கப்படும். திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சியை நேரத்தால் வகுக்கத்து கணக்கிடப்படும். இதன் அலகு வினாடிக்கு ஒரு மீட்டர் என்பதாகும். இது \(ms^{−1}\) என குறிக்கப்படும்.
எண்இயற்பியல் அளவுவாய்ப்பாடுஅலகு
1பரப்புநீளம் × அகலம்மீ\(^2\) \((m^2)\)
2பருமன்நீளம் × அகலம் × உயரம்மீ\(^3\) \((m^3)\)
3அடர்த்திநிறை / பருமன்கி.கி/மீ\(^3\) \((kg / m^3)\)
4திசைவேகம்இடப்பெயர்ச்சி/காலம்மீ/வி \((m/s)\)
5உந்தம்நிறை × திசைவேகம்கி.கிமீ/வி \((kgms^-1)\)
6முடுக்கம்திசைவேகம் /காலம்மீ/வி\(^2\) \((m/s^2)\)
7விசைநிறை × முடுக்கம்கி .கிமீ/ வி\(^2\) \((kgms^-2)\) அல்லது நியூட்டன் \((N)\)
8அழுத்தம்விசை / பரப்பளவுநியூட்டன் / மீ\(^2\) \((N/m^2)\) அல்லது பாஸ்கல் \((Pa)\)
9ஆற்றல் (வேலை)விசை × தொலைவுநியூட்டன் × மீ \((Nm)\) அல்லது ஜுல் \((J)\)
10பரப்பு இழுவிசைவிசை / நீளம்நியூட்டன் / மீ \((N/m)\)