PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இரண்டாம் உலகப் போரின் முடிவில், \(1960\) ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற General Conference on Weights and Measures குறித்த \(11\)வது பொது மாநாட்டில், இயற்பியல் அளவுகளுக்கான நிலையான அலகுகளின் முக்கியத்துவத்தை அறிவியல் அறிஞர்கள் அங்கீகரித்துள்ளனர்.
 
இதன் விளைவாக, மெட்ரிக் அமைப்பு என்ற தொகுப்பை சீரான அளவீடுகளுக்காக உருவாக்கினர். அளவீடுகளை, உலகில் அனைத்து பகுதிகளிலும், சீராக குறிக்க International System of Units அல்லது \(SI\) அலகுகள் அல்லது பன்னாட்டு அலகுகள் பயன்படுத்தபடுகிறது.
 
பண்டைய அலகு முறைகளைவிட நவீனமயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறை, \(SI\) அலகு முறையாகும். உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளால் இம்முறையானது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
'SI' என்ற சொல் 'Systeme International' என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து சுருக்கப்பட்டது.
 

இது, சில அடிப்படையான அலகுகளைக் கொண்டது. அந்த அடிப்படை அலகுகளிலிருந்து முறையான இணைப்பின் மூலம் பிற வழி அலகுகளைப் பெறமுடியும்.

 

SI அலகு முறையில் ஏழு அடிப்படை அலகுகள் உள்ளன. அவை அடிமான அலகுகள் என்றும் வழங்கப்படுகின்றன. அடிப்படை அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் அடிப்படை அலகுகள் என்றும் வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் வழி அலகுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

 

''அடிப்படை அளவுகள்' என அறியப்படும் ஏழு இயற்பியல் அளவுகள் உள்ளன, அவற்றை அளவிட நிலையான அலகுகள் உருவாக்கப்பட்டன. அந்த நிலையான அலகுகள் 'அடிப்படை அலகுகள்' என அழைக்கப்பட்டன, அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

 

அளவுஅலகு
நீளம் மீட்டர் \((m)\)
நிறை கிலோகிராம் \((kg)\)
காலம்வினாடி \((s)\)
வெப்பநிலை கெல்வின் \((K)\)
மின்னோட்டம்அம்பியர் \((A)\)
பொருளின் அளவு மோல் \((mol)\)
ஒளிச்செறிவுகேண்டிலா (\(cd)\)

இந்த ஏழு அடிப்படை அலகுகளின் துணைகொண்டு, பிற வழி அளவுகளின் அலகுகள் வருவிக்கப்படுகின்றன.
 
8thmeasurementphysics.png