PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பால்மானி என்பது ஒருவகையான திரவமானியாகும். இது பாலின் தூய்மையைக் கண்டறியப் பயன்படும் ஒரு உபகரணமாகும். பாலின் தன்னடர்த்தி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பால்மானி வேலை செய்கின்றது.
பால்மானியானது நீண்ட அளவிடப்பட்ட சோதனைக் குழாயுடன் உருளையான குமிழைக் கொண்டது. சோதனைக் குழாயின் மேற்பகுதியில் \(15\)-ல் தொடங்கி  அடிப்பகுதியில் \(45\) வரை அளவீடுகள் குறிக்கப்பட்டிருக்கும்.
 
7.png
பால்மானி
காற்றினால் இச்சோதனைக்குழாய் நிரப்பப்பட்டிருக்கும். இக்காற்று தான் பால்மானியை மிதக்க வைக்க உதவுகிறது.
 
பால்மானியை உருளையான குமிழினுள் நிரப்பப்பட்ட பாதரசமானது, பாலின் உள்ளே சரியான அளவு மூழ்கவும், செங்குத்தான நிலையில் மிதக்கவும் உதவுகிறது.
பால்மானியினுள்ளே வெப்பநிலைமானியும் இருக்கலாம். அது அடிப்பகுதியில் உள்ள குமிழ் முதல், அளவீடுகள் குறிக்கப்பட்ட மேற்பகுதி வரை அமைந்திருக்கும். \(60\ °F\) வெப்பநிலையில்தான் பால்மானி மூலம் சரியான அளவீடுகளை அளக்க முடியும்.
 
ஒரு பால்மானி பாலில் உள்ள அடர்த்தியான வெண்ணையின் அளவை அளவிடக்கூடியது. வெண்ணையின் அளவு அதிகரிக்கும் போது, பால்மானி பாலில் குறைவாக மிதக்கும்.
 
பால்மானி அளவிடும் சராசரியான பாலின் அளவீடு \(32\) ஆகும். இவை பெரும்பாலும் பால் பதனிடும் இடங்களிலும், பால் பண்ணைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
 
8.jpg
பாலின் தூய்மையை பரிசோதித்தல்
Reference:
https://www.flickr.com/photos/ilri/13889870345