PDF chapter test TRY NOW

நுண்ணோக்கியின் மூலம் எபிதீலியத் திசுவின் வகையைக் கண்டறியவும்.
 
தேவையான பொருள்கள் :
 
தண்ணீர், பல் குச்சி அல்லது ஜஸ்கிரீம் குச்சி, கண்ணாடித் தட்டு, மெத்திலின் நீலம் சாயம், நுண்ணோக்கி.  
 
செய்முறை :
  1. உன்னுடைய வாயைத் தண்ணீரினால் நன்கு சுத்தம் செய்யவும்.
  2. பல் குச்சி அல்லது ஜஸ்கிரீம் குச்சியால், உட்கன்னப் பகுதியிலிருந்து சிறிது மேல் பூச்சினை கரண்டியில் எடுத்து சுத்தமான சிறிய கண்ணாடித் தட்டில் செல்களை மேலோட்டமாக உலர வைக்கவும்.
  3. உலர்ந்த பின்பு இத்துடன் இரண்டு சொட்டு மெத்திலின் நீலம் சாயத்தை சேர்க்கவும். குறைந்த மற்றும் அதிக ஆற்றலுள்ள நுண்ணோக்கியில் இந்த செல்களைப் பார்.
  4. நுண்ணோக்கியில் கண்ட செல்களை கொடுக்கப்பட்ட படத்துடன் ஒப்பிட்டு, எபிதீலியத் திசுவின் வகையைக் கண்டறியவும்.
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஆசிரியரின் உதவியுடன் செய்து மேற்கொள்ளவும்.