PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் பகுதிகள்:
  1. விந்தகம் (முதன்மை இனப்பெருக்க உறுப்பு)
  2. விரைப்பை (scrotum)
  3. விந்துநாளம் (vas deferens)
  4. சிறுநீர்புறவழிக்குழாய் (urethra)
  5. ஆணுறுப்பு (penis)
  6. துணைச் சுரப்பிகள் (accessory glands)
YCIND_221201_4749_organ_system_1.png
ஆண் இனப்பெருக்க மண்டலம்
 
விந்தகங்கள்:
விந்தகம் என்பது ஆண் பாலின உறுப்பாகும். இது ஆண்களின் வயிற்றுப் பகுதிக்கு வெளியே காணப்படுகிறது. மேலும், இதில் ஒரே மாதிரியான அளவில் இரண்டு விந்தகங்கள் உள்ளது.
பணிகள்:
 
விந்தகத்தில் காணப்படும் ஆண் பாலினச் சுரப்பிகளிலிருந்து ஆண் பாலின உயிரணுவான விந்து மற்றும் ஆண் பாலியல் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான் போன்றவை உற்பத்தி செய்யப்படுவதே விந்தகங்களின் முதன்மையான செயற்பாடுகள் ஆகும்.
 
அதிகமான சுருட்டப்பட்ட நுண்குழாய்கள் ஒவ்வொரு விந்தகத்தின் உட்பகுதியிலும் உள்ளது. அவை எப்பிடிடைமிஸ் (epididymis) என அழைக்கப்படும். மேலும் விந்தகத்தில் உள்ள செர்டோலி (sertoli) செல்கள் விந்தணு வளர தேவையான ஊட்டச்சத்தினை கொடுக்கிறது.
 
விரைப்பை:
விரைப்பை என்பது ஆணுறுப்பின் பின்பகுதியில் உள்ள ஒரு சிறு தோற்பை போன்ற அமைப்புடையது. இதில் இரண்டு விந்தகங்கள் காணப்படுகிறது. இவை விதைப்பை எனவும் அழைக்கப்படும்.
விதைப்பையின் உட்பகுதி ஓர் தசையினால் (scrotal sac) வலது மற்றும் இடது பக்கம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு விந்தகங்களுடன், பல நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களையும் கொண்டுள்ளது.
 
பணிகள்:
 
விரைப்பை வெப்பத்தைச் சீராகும் (thermoregulator) உறுப்பாகச் செயல்படுகிறது. இவை விந்துக்கள் உருவாக்குவதற்குத் தேவையான வெப்பநிலையை அளிக்கிறது. விந்தணு வளர்ச்சி சாதாரண உடல் வெப்பநிலை \(37°C\) விட \(1\) முதல் \(3\)\(°C\) குறைந்த வெப்பநிலையிலே உருவாகிறது.
 
விந்து நாளம்:
விந்து நாளம் என்பது விந்து வெளியேற்றம் செய்யப்படும் ஓர் உறுப்பாகும். இது நேராகக் காணப்படும் குழாய் போன்ற அமைப்புடையது. விந்துச் சுரப்பியின் பின்புறத்தில் மேல் நோக்கி அமைந்திருக்கும். இவை விந்தணுவினை விந்துப்பைக்கு (seminal vesicle) எடுத்துச் செல்லும்.
பணிகள்: விந்துப்பையில் விந்தணுக்கள் உள்ளது. இது பிளாஸ்மாவில் சேகரிக்கப்படும். இதில் அதிகமாக பிரக்டோஸ் (fructose), கால்சியம் மற்றும் நொதிகள் இருக்கும். பிரக்டோஸ் விந்தணுவிற்கு ஊட்டத்தைக் கொடுக்கும் ஆதாரமாகக் காணப்படுகிறது.
 
விந்துப்பையை தொடர்ந்து விந்துநாளமானது விந்து வெளியேற்றும் நாளத்தில் திறக்கிறது. விந்துப்பையில் உள்ள விந்தும் மற்றும் பிற சுரப்பிகளும் சேர்ந்து விந்து வெளியேற்றும் நாளத்திற்குச் செல்கிறது இது சிறுநீர் புறவழிக்குழாய் வழியாக (urethra) வெளியே அனுப்பப்படுகிறது.
 
சிறுநீர் புறவழிகுழாய்:
ஆண்களுக்கு சிறுநீர் புறவழியானது ஆண்குறியின் உள்ளாகச் செல்கிறது. இது சிறுநீரை மட்டுமன்றி விந்தணுக்களை வெளியேற்ற உதவுகிறது.
பணிகள்:
 
இவை ஆண் இனப்பெருக்க அமைப்புடன் தொடர்புடைய இணைச் சுரப்பிகள், விந்தணுப்பை, ப்ரோஸ்டேட் சுரப்பி மற்றும் கோப்பர் சுரப்பிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்தச் சுரப்பிகளில் மூலம் சுரக்கும் திரவமானது விந்தணுவுடன் சேர்ந்து இடம்பெயர்ந்து செல்வதோடு அவற்றிற்கு ஆற்றலையும் அளிக்கிறது.
 
Important!
ஒரு ஆண் தனது வாழ்நாள் முழுவதும் மொத்தம் \(17\) லிட்டர் விந்து திரவத்தை  வெளியேற்றுகிறான். அதாவது இவை  \(500\) பில்லியன் விந்தணுக்களை உள்ளடக்கியது. இவ்வாறாக விந்துவை உருவாக்கும் முறைக்கு விந்தணுவாக்கம் (ஸ்பெர்மடோஜெனிசிஸ்) என்று பெயர். இது தான் ஆணின் உடலில் உள்ள மிகச் சிறிய செல் ஆகும்.