PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
 
1. சிறுநீரக கார்ப்பசல்:
 
சிறுநீரக கார்ப்பசல்  கிண்ணம் போன்ற அமைப்புடையது.
 
பணிகள்: இரத்த நுண் நாளங்களின் தொகுப்பாகிய கிளாமருலஸ் என்ற பகுதி இக்கிண்ணத்தில் காணப்படுகிறது.  உள்ள நுண்நாளத்தொகுப்பில் இரத்தமானது உட்செல் நுண் தமனி வழியாக உள்சென்று, வெளிச்செல் நுண்தமனி வழியாக வெளியேறுகிறது.
 
2. சிறுநீரக நுண்குழல்கள்:
 
சிறுநீரக கார்ப்பசலைத் தொடர்ச்சியாக உள்ள சிறுநீரக நுண்குழல்கள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது, அவைகள்: 
  • அண்மைச்சுருள் நுண்குழல்
  • ஹென்லேயின் வளையம்
  • சேய்மைச்சுருள் நுண்குழல்
பணிகள்: சேகரிப்புநாளத்தில்  திறக்கும். சிறுநீரகப் பெல்விஸில் கழிவு வடிகட்டப்படுகிறது. பின்னர் சிறுநீர்ப்பையில் தற்காலிகமாக சிறுநீர் சேகரிக்கப்பட்டு, சிறுநீர்புறவழி மூலம் வெளியே அனுப்பப்படுகிறது.