PDF chapter test TRY NOW

நம்மை சுற்றி உள்ள அனைத்து பருப்பொருள்களும் அணுக்களாலும், மூலக்கூறுகளாலும் ஆனவை ஆகும். ஒரு அணு என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டு இருக்கும்.
 
YCIND20220805_4002_Electricity_01 (2).png
அணுவின் அமைப்பு
 
அணுவில் இருக்கும் எலக்ட்ரான்கள் எதிர் மின்னூட்டம் கொண்டவையாக இருக்கும் மற்றும் புரோட்டான்கள் நேர் மின்னூட்டம் கொண்டவையாக இருக்கும். நியூட்ரான்களுக்கு மின்சுமை இருக்காது.
நிறை, நீளம் ஆகியவற்றைப் போன்று  மின்னூட்டமும் அனைத்துப் பருப்பொருள்களுக்கும் உரிய ஒரு அடிப்படைப் பண்பு ஆகும்.
 நாம் இப்பாடத்தில் மின்னூட்டம், மின்னோட்டம், மின்சுற்றுப் படங்கள் மற்றும் மின்னோட்டத்தின் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி கற்றுக் கொள்ள இருக்கிறோம்.