PDF chapter test TRY NOW

நீரோட்டத்தையும் மின்னோட்டத்தையும் ஒப்பிட்டு மின்னியக்கு விசையை புரிந்துக் கொள்வோம். 
 
shutterstock659305987.jpg
நீர் இறைப்பான்
  • ஒரு நீர் நிரப்பப்பட்ட குழாயின் இரு முனைகளும் ஒன்றுடன் ஒன்று  இணைக்கப்பட்டுள்ளதாகக் கொள்வோம்.
  • அக்குழாயினுள் முழுவதும் நீர்  நிரம்பி இருந்தாலும், நீர் தானாகவே அந்தக் குழாயினுள் சுற்றிவர முடியாது.
  •  இறைப்பான் (pump) ஒன்றை அக்குழாயுடன்  இணைத்தால், அது நீரைத் தள்ளுவதன் மூலம் குழாயினுள் நீரோட்டம்  உருவாகும்.
  • இயங்கும் நீரைக் கொண்டு, நாம் நமக்கு பயன்படும் வகையில் வேலை செய்துக் கொள்ள முடியும்.
  • நீர்ச்சக்கரம் ஒன்றை இடையில் பொருத்தினால், அது சுழலும், அதன் மூலம் பொறிகளை இயக்கி கொள்ள முடியும்.
YCIND20220901_4420_Electric charge and current 2_04.png
நீர் -இறைப்பான் மற்றும் மின்கல அடுக்கு
  •  ஒரு வட்ட வடிவ தாமிரக்கம்பி எலக்ட்ரான்களால் நிரம்பியுள்ளது. இருந்தாலும், அவை எந்த ஒரு குறிப்பிட்ட திசையிலும் இயங்குவதில்லை. அவற்றை குறிப்பிட்ட ஒரு திசையில் இயக்க, விசை ஒன்று தேவைப்படுகிறது.
  • மின்கலங்களும், மற்ற மின்னாற்றல் மூலங்களும் இறைப்பானைப் போன்று செயல்பட்டு, மின்னூட்டங்களைத் தள்ளுவதால்  அவை கம்பி அல்லது கடத்தியின் வழியே பாய்கின்றது.
மின்னாற்றல் மூலங்களின் மூலம் மின்னூட்டங்களை இயக்க தேவைப்படும் அந்த விசை "மின்னியக்கு விசை" (Electromotive force) எனப்படும். மின்னியக்கு விசையை  \(ε\)  என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது
ஒரு மின்னாற்றல் மூலத்தின் மின்னியக்கு விசை என்பது ஓரலகு மின்னூட்டமானது (\(q\)) மின்சுற்றை ஒருமுறை சுற்றிவர செய்யப்படும் வேலை (\(W\)) ஆகும்.
\(ε\) \(=\) \(\frac{\text{W}}{\text{q }}\)
 
இங்கு, \(W\) என்பது செய்யப்பட்ட வேலை ஆகும்.
 
மின்னியக்கு விசையின் \(SI\) அலகு \(\frac{\text{ஜூல்}}{\text{கூலூம்}}\) \(\text{JC}^{-1}\) அல்லது வோல்ட் (\(v\))ஆகும்.
மின்னாற்றல் மூலம் ஒரு கூலூம் மின்னூட்டத்தை மின்சுற்றைச் சுற்றி அனுப்ப ஒரு ஜூல் வேலையைச் செய்தால் அதன் மின்னியக்கு விசை \(1\) வோல்ட் எனலாம்.