PDF chapter test TRY NOW

மின்தடை மற்றும் மின்தடை மாற்றியை பற்றி இப்பகுதியில் காண்போம்.
 
ஓர் மின்சுற்றில் இணைக்கப்படும் மின்தடையானது அந்த மின்சுற்றில் பாயக்கூடிய மின்னூட்டத்தின் இயக்கத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஓர் மின் உறுப்பு ஆகும்.
  • நீரோட்டம் பாயும் வீதத்தை ஓர் குறுகிய வழியானது எவ்வாறு பாதிக்கின்றதோ அவ்வாறே மின் உறுப்பான மின்தடையானது மின்னூட்டம் பாயும் வீதத்தை எதிர்க்கும்.
YCIND20220805_4002_Electricity_06 (1).png
  • ஒரு மின் சுற்றில் உள்ள மின் கருவியின் வழியே மின்னோட்டம் பாய்வதற்கு அக்கருவி அளிக்கும் எதிர்ப்பின் அளவே மின்தடை\(R\) எனப்படும். வெவ்வேறு மின் பொருள்களின் மின்தடை வெவ்வேறாக இருக்கும்.
மின்தடையின் \(SI\) அலகு ஓம் மற்றும் அதன் குறியீடு \(Ω\) ஆகும்.
ஒரு கடத்தியின் வழியாக \(1\) ஆம்பியர் மின்னோட்டம் பாயும் போது அதன் முனைகளுக்கிடையிலான மின்னழுத்த வேறுபாடு \(1\) வோல்ட் எனில் அந்தக் கடத்தியின் மின்தடை \(1\) ஓம் ஆகும்.
  • மின்தடையைப் பயன்படுத்தி ஒரு மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவை நம்மால் கட்டுப்படுத்த முடியும். மின்தடையை அளிக்கும் பொருள்களுக்கு ’மின்தடையங்கள்’ எனப்படும்.
மின்தடையங்கள் நிலையான மதிப்புகளை கொண்டவையாகவோ அல்லது மாறும் மதிப்புடையனவாகவோ இருக்கலாம்.
YCIND20220825_4331_Electric charge and current_07.png
  • நிலையான மின்தடையங்கள் ஒரு குறிப்பிட்ட மாறாத மதிப்புடைய மின்தடையைக் கொண்டவையாக இருக்கும்.
  • மாறும் மின்தடையங்களும், மின்தடை மாற்றிகளும் நமக்குத் தேவைப்படும் மதிப்புடைய மின்தடைகளைப் பெறும் வண்ணம் மாற்றியமைக்கக் கூடிய தன்மையைப் பெற்று இருக்கும்.
Important!
மின்னியக்கு விசை மற்றும் மின்னழுத்த வேறுபாடு இரண்டிற்குமான வேறுபாடு:
 
மின்னியக்கு விசை மற்றும் மின்னழுத்த வேறுபாடு இரண்டையுமே அளவிடவோல்ட் என்ற அலகை நாம் பயன்படுத்துவதினால் மின்னியக்கு விசை மற்றும் மின்னழுத்த வேறுபாடு இரண்டும் ஒன்று போல் நமக்கு தோன்றும். ஆனால் உண்மையில் இவை இரண்டும் ஒன்றே கிடையாது. 
  • மின்னாற்றல் மூலம் மின்சுற்றின் வழியே மின்னோட்டத்தைச் செலுத்தாத நிலையில் அதன் முனைகளுக்குக்கிடையே காணப்படும் மின்னழுத்தங்களின் வேறுபாடு மின்னியக்கு விசை எனப்படும்.
  • மின்னாற்றல் மூலமானது மின்கருவிகளின் வழியாகவோ அல்லது ஒரு மின்சுற்றின் வழியாகவோ மின்னோட்டத்தைச் செலுத்தும் நிலையில் அதன் முனைகளுக்குக் கிடையே காணப்படும் மின்னழுத்தங்களின் வேறுபாடு மின்னழுத்த வேறுபாடு எனப்படும்.