PDF chapter test TRY NOW

மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும். மின்சாதனங்கள் இயங்க வேண்டும் எனில், அச்சாதனங்கள் வழியே மின்னோட்டம் பாய வேண்டும்.
ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டமானது ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஓர் புள்ளி வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவைக் கொண்டு அளவிடப்படுகிறது. மின்னோட்டத்தை \(I\) என்ற குறியீட்டால்  குறிக்கப்படுகிறது.
  • மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றிற்கு கடத்தும் பாதை அளிக்கப்பட்டால், அதில் எலக்ட்ரான்கள் அதிக மின்னழுத்தத்திலிருந்து குறைவான மின்னழுத்தத்திற்கு அப்பாதை வழியே பாயும்.
YCIND20220805_4002_Electricity_02 (1).png
குறுக்கு வெட்டுப் பரப்பு   
 
மின்னழுத்த வேறுபாடானது, ஒரு மின்கலத்தினாலோஅல்லது மின்கல அடுக்கினாலோ வழங்கப்படும். எலக்ட்ரான்கள் நகரும் போது மின்னூட்டம் உருவாகும் என்பது நமக்கு தெரியும். அதாவது, மின்னூட்டமானது நகரும் எலக்ட்ரான்களால் உருவாகிறது.
 
மின்னோட்டத்தின் திசை:
 
எலக்ட்ரான்களின் கண்டுபிடிப்பிற்கு முன்னர், நகரும் நேர் மின்னூட்டங்களே மின்னோட்டத்திற்கு காரணம் என அறிவியல் அறிஞர்கள் நம்பினார்கள். இது தவறு என்பதை இப்போது நாம் அறிந்திருந்தாலும் இக்கருத்து, இன்னும் பரவலாக இருந்து வருகிறது. மேலும், எலக்ட்ரானின் கண்டுபிடிப்புக்குப் பின்னரும் மின்னோட்டத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
 
YCIND20220805_4002_Electricity_05 (1).png
எலக்ட்ரான்களின்  ஓட்டம்
எலக்ட்ரான்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, எலக்ட்ரான்களின் ஓட்டம் உண்மையில் மின்கலத்தின் எதிர் முனையில் இருந்து நேர் முனை வரை நடைபெறுகிறது என அறியப்பட்டது. இவ்வியக்கம் எலக்ட்ரான் ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.
YCIND20220805_4002_Electricity_04 (1).png
மரபு மின்னோட்டம்
நேர்மின்னூட்டங்களின் இயக்கம் "மரபு மின்னோட்டம்" எனப்படும்.  
YCIND20220805_4002_Electricity_09 (1).png
மின் கல குறியீடு
  • மின்சுற்றுப் படங்களில் நேர் மின்வாயை நீளமான கோட்டுத்துண்டினாலும் எதிர் மின்வாயை சிறிய கோட்டுத்துண்டினாலும் குறிப்பிடப்படும்.
YCIND20220805_4002_Electricity_12 (1).png
மின்கல அடுக்கு
 
மின்கல அடுக்கு என்பது ஒன்றுக்கு மேற்பட்ட மின்கலங்களின்  தொகுப்பு ஆகும்.