PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வேகம் மற்றும் நேரத்தைப் பொறுத்து முடுக்கம்இரண்டு வகைப்படும். அவைகள் முறையே
  • சீரான முடுக்கம்
  • சீரற்ற முடுக்கம்
சீரான முடுக்கம்:
 
ஒரு பொருளின் திசைவேகத்தில் சீரான கால இடைவெளியில் காலத்தினைப் பொருத்து ஏற்படும் மாற்றம் (அதிகரித்தல் அல்லது குறைதல்) சீரானதாக இருப்பின் அம்முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.
Example:
தன்னிச்சையாக கீழே விழும் பொருள் மற்றும் நிலத்தில் விழும் மழைத்துளிகள்
சீரற்ற முடுக்கம்:
 
ஒவ்வொரு அலகு நேரத்திலும் ஒரு பொருளின் திசைவேகத்தில் காலத்தைப் பொருத்து ஏற்படும் மாற்றமானது சீரற்றதாக இருந்தால் அம்முடுக்கமானது சீரற்ற முடுக்கம் எனப்படும்.
Example:
இரு சக்கர வாகனத்தின் இயக்கம் மற்றும் வட்ட பாதையில் செல்லும் பொருள்