PDF chapter test TRY NOW

வேகம் என்பது பொருள் எவ்வளவு விரைவாக இயங்குகிறது என்பதை மட்டுமே கணக்கிடுகிறது.  ஆனால் அப்பொருள் பயணிக்கும்  திசையைக் குறிப்பிடவில்லை.
 
எனில், வேகத்தையும், அப்பொருள் நகரும் திசையையும் குறிக்கிறது எவ்வாறு கண்டுபிடிப்பது?
 
திசைவேகம் என்பது வேகத்தையும், அப்பொருள் நகரும் திசையையும் குறிக்கிறது.
 
திசைவேகம்:
ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி அல்லது இடப்பெயர்ச்சியின் மாறுபாட்டு வீதம் திசைவேகம் எனப்படும்.
இது எண்மதிப்பு மற்றும் திசை ஆகிய இரண்டையும் கொண்ட திசையளவுரு (வெக்டர்) ஆகும்.
 
SI அளவீட்டு முறையில் இதன் அலகு \(\text{மீவி}^{-1}\) ஆகும்.
  
\(\text{திசைவேகம்}\) (\(V\)) \(=\) இடப்பெயர்ச்சிகாலம்
 
சீரான திசைவேகம்:
 
ஒரு பொருளானது தன் இயக்கத்தின் போது திசையினை மாற்றாமல் சமகால இடைவெளிகளில் சமஅளவு இடப்பெயர்ச்சியினை மேற்கொண்டால், அது சீரான திசைவேகத்தில் இயங்குகிறது எனப்படுகிறது.
Example:
வெற்றிடத்தில் பயணம் செய்யும் ஒளி
சீரற்ற திசைவேகம்:
 
ஒரு பொருளானது தன் இயக்கத்தின் போது திசையையோ அல்லது வேகத்தினையோ மாற்றிக்கொண்டால் அப்பொருள் சீரற்ற திசைவேகத்தில் உள்ளது எனப்படுகிறது.
Example:
இரயில் நிலையத்திற்கு வரும் அல்லது அங்கிருந்து புறப்படும் தொடர்வண்டியின் இயக்கம்
சராசரி திசைவேகம்:
 
சாராசரி திசைவேகம் என்பது ஒரு பொருள் கடந்த மொத்த இடப்பெயர்ச்சிக்கும், அந்த தூரத்தை கடப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரத்துக்கும் உள்ள தகவாகும்.
 
\(\text{சராசரி திசைவேகம்}\) \(=\) மொத்த இடப்பெயர்ச்சி எடுத்துக்கொண்ட மொத்தக் காலம்
Example:
வாகனத்தில் உள்ள வேகமானி