PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அறிவியல் அறிஞர் நியூட்டன், ஒரு பொருளின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் விளைவாக மூன்று இயக்க சமன்பாடுகளை கண்டறிந்தார்.
  • இந்த சமன்பாடுகள் இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி, திசைவேகம், முடுக்கம் மற்றும் நேரம் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினைக் கூறுகின்றன.
  • ‘\(a\)’ என்ற முடுக்கத்தினால் இயங்கும் பொருள் ஒன்று ‘\(t\)’ காலத்தில் ‘\(u\)’ என்ற தொடக்க திசை வேகத்திலிருந்து ‘\(v\)’ என்ற இறுதித் திசைவேகத்தை அடைகிறது. அப்போது அதன் இடப்பெயர்ச்சி ‘\(s\)’ எனில் இயக்கச் சமன்பாடுகளை கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
v= u + at _____________(\(1\))
 
S= ut + 12at2 ________(\(2\))
 
v2 = u2 + 2as __________(\(3\))
  • இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளுக்கு, வரைபட முறையின் மூலம் இந்த சமன்பாடுகளைப் பெற முடியும்.
  • கீழே உள்ள திசைவேகம் - காலம் மாறுபாடு வரைபடம் சீராக முடுக்கப்பட்ட பொருள் ஒன்று காலத்தைப் பொறுத்து அடையும் திசைவேக மாற்றத்தைக் காண்பிக்கிறது.
YCIND16052022_3761_Motion (TN 9th Tamil)_7.png
திசைவேகம் - காலம் மாறுபாடு
 
வரைபடத்தில் ‘\(D\)’ என்ற தொடக்கப் புள்ளியிலிருந்து ‘\(u\)’ என்ற திசை வேகத்துடன் இயங்கும் ஒரு பொருளின் திசைவேகம் தொடர்ச்சியாக அதிகரித்து ‘\(t\)’ காலத்திற்குப் பின் ‘\(B\)’ என்ற புள்ளியை அப்பொருள் அடைகிறது.
 
\(\text{பொருளின் தொடக்க திசைவேகம்}\) \(=\) \(u\) \(=\)  \(OD\)  \(=\) \(EA\)
 
\(\text{பொருளின் இறுதித் திசைவேகம்}\) \(=\) \(v\)  \(=\) \(OC\) \(=\) \(EB\)
 
\(\text{காலம்}\)\(=\) \(t\)  \(=\) \(OE\)  \(=\) \(DA\)
 
வரைபடத்திலிருந்து,
 
\(AB\) \(=\) \(DC\) ஆகும்.