PDF chapter test TRY NOW

நாம் இந்த உலகில் பல வகை தன்மையுடைய பொருள்களோடு வாழ்கிறோம். இவை அனைத்தும், தனிமங்கள் பல்வேறு முறையில் இணைந்ததால்  உருவானவை. எல்லா தனிமங்களும் அவற்றின் தன்மை மற்றும் பண்புகளில் தனித் தன்மை பெற்றவை. ஒன்று போல் மற்றொன்று எப்போதும் இருக்காது.
 
evolution-g9aa33a4cf_1280.png
பரிணாம வளர்ச்சி
 
இந்த தனிமங்களையெல்லாம் அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்த அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு வழியைத் தேடிக் கொண்டிருந்தனர் . அப்போது அதாவது \(1800\) இல் \(31\) தனிமங்கள் மட்டுமே கண்டு அறியப்பட்டிருந்தன. பின் \(1865\) இல் அது \(63\) தனிமங்கள் என மாறியது. இப்பொழுது வரை \(118\) தனிமங்கள் கண்டு அறியப்பட்டுள்ளன. புதுப்புது தனிமங்களைக் கண்டுபிடிக்கும் போது அறிஞர்கள் அவற்றின் பண்புகளைக் குறித்து புதிய புதிய கண்டு பிடிப்புகளை ஆய்வுகள் மூலம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர்.
 
scientist-g511621d9f_1920.jpg
அறிவியல் கண்டுபிடிப்பு
 
இப்பண்புகளை  ஒழுங்குபடுத்துவது அறிவியல் அறிஞர்களுக்கு சிறிது கடினமாகக் காணப்பட்டது. எனவே, இவற்றை பண்புகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்த இவர்கள் ஒரு தனித்துவமான முறையைத் தேடினர். இதை அடிப்படையாகக் கொண்டு தனிமங்களை எளிதில் அடையாளம் கண்டு அவற்றை ஆராய்வது எளிது எனக் கருதினர்.
 
ஆரம்ப காலம் முதல் இன்றுவரை பல்வேறு அறிஞர்கள் எடுத்து உரைத்த தனிமங்களின் வகைப்பாடு பற்றிய பல்வேறு கருத்துக்களை இங்கு தெளிவாக காண்போம்.