PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு மனிதன் தினமும் உண்ணும் உணவில் குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துகள் இல்லாமல் போவதால் ஏற்படும் நோய்கள் குறைபாட்டு நோய்கள் எனப்படும். மேலும், இந்த நிலை "ஊட்டச்சத்துக் குறைபாடு" எனக் குறிக்கப்படுகின்றது.
குறைபாட்டு நோய்களின் காரணங்கள்:
  • சரிவிகித உணவு உண்ணாமை
  • வறுமை
  • உணவு தட்டுப்பாடு
  • உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள்
  • குறைபாட்டு நோய் குறித்த விழிப்புணர்வின்மை
  • உணவு பாதுகாப்பின்மை
புரதக்குறைபாட்டினால் குவாசியோர்கர் (Kwashiorkar) மற்றும் மராஸ்மஸ் (Marasmus) நோய்கள் ஏற்படுகின்றன.
 
குவாசியோர்கர் (Kwashiorkar):
  • இது முக்கியமாகக் குழந்தைகளைப் பாதிக்கும் ஒரு குறைபாட்டு நோய் ஆகும்.
  • குழந்தைகளில் \(1\)-\(5\) வயதுள்ளவர்களை அதிகமாகத் தாக்கும்.
  • நீண்ட காலமாகக் குழந்தைகள் உண்ணும் உணவில் புரதம் இல்லாமல் போவதே இந்த நோய்க்கான காரணமாகும்.
  • அதாவது அவர்கள் உணவில் கார்போஹைட்ரேட் இருக்கும் ஆனால், புரதம் இருக்காது அல்லது மிகக் குறைந்த அளவே காணப்படும்.
NelsonBastidasShutterstock.jpg
குவாசியோர்கர்
 
அறிகுறிகள்:
  • கை, கால் வீக்கம்
  • முகம் வீங்குதல்
  • வயிற்றுப்போக்கு
  • வயிறு பெரிதாகுதல்   
  • குன்றிய உடல் வளர்ச்சி
  • கல்லீரல் வீக்கம்
மராஸ்மஸ் (Marasmus):
  • இது குறிப்பாக பச்சிளம் குழந்தைகளைத் தாக்குகின்றது.
  • அவர்களின் உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு மிகக்குறைந்த அளவே இருக்கும்.
AmorsphotosShutterstockw300.jpg
மராஸ்மஸ்
  
அறிகுறிகள்:
  • மெதுவான உடல் வளர்ச்சி
  • மெல்லிய தேகம்
  • எடை குறைதல்