PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பொருளாதார லாபத்திற்காக தெரிந்தே உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்படப் பொருட்கள் பல உள்ளன. இது போன்ற உணவை உட்கொள்ளும் நபருக்கு பலதரப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியம் குன்றி நோய்களும் வர வாய்ப்புகள் உள்ளது. அவற்றில் சில பொருட்கள் கீழே தரப்பட்டு உள்ளன.
  • உணவு பாதுகாப்பு பொருட்கள்.
Important!
வினிகர், சிட்ரிக் அமிலம், சோடியம் பைகார்பனேட் (சமையல் சோடா),  செயற்கை மாவுப்பொருள், உணவு நறுமணப்பொருள்கள், செயற்கை வேதிப்பொருள்கள், பாலில் சேர்க்கப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு,மற்றும் செயற்கை இனிப்பூட்டும் பொருள்கள்.
  • கனிகளில் வாழைப்பழம் மற்றும் மாம்பழங்களைப் பழுக்க வைக்க கால்ஷியம் கார்பைடு என்னும் வேதிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இது கேன்சர் போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்த கூடிய ஒரு வேதிபொருள் ஆகும்.
shutterstock_2041401473.jpg
கனிகள் பழுக்க வைக்க கால்ஷியம் கார்பைடு பயன்படுத்துதல்
  • காரீய உலோகம் கலந்த அரசாங்கத்தால் அங்கீகாரம் செய்யப்படாத நிறமூட்டி பச்சை நிற காய்கறிகளின் நிறத்தை கொடுக்க பயன்படுத்தப்படுகின்றது. இந்த நிறமூட்டிகள் காய்கறிகள் வாடிய தோற்றம் வராமல் தடுக்கும்.
  • கனிகளில் ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் பளபளப்பு தோற்றம் வர செயற்கை மெழுகு செல்லாக் அல்லது கார்னோபா போன்றவை சேர்க்கப்படுகின்றன. இவை உண்ணக்கூடிய ஆனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப்படப் பொருள் ஆகும்.
 shutterstock_2200467587.jpgshutterstock_2055149528.jpg
செயற்கை மெழுகு
  • மண், சாக் தூள், நீர், கனிம எண்ணெய் போன்றவை உணவுகளில் கலக்கப்படுகின்றன.
  • தற்போது ஆக்ஸிடாஸின் என்னும் மருந்துடன் ஊசி முள்ளங்கி மற்றும் பிற காய்களில் அளவை பெரிதாகக் காட்ட பயன்படுத்தப்படுகின்றது.
shutterstock_1922993036.jpgshutterstock_645884623.jpg
ஊசி செலுத்தப்படுதல்
 
கலப்பட உணவுகளால் மனிதனின் உடலில் பல நோய்கள் உடலில் ஏற்படுகின்றன. அவை பின்வருமாறு,
  • காய்ச்சல்
  • வயிற்றுப்போக்கு
  • குமட்டல்
  • வாந்தி
  • தோல் ஒவ்வாமைகள்
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்
  • சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்படைதல்
  • மலக்குடல் புற்றுநோய்
  • குறைபாடுகளுடன் குழந்தை பிறத்தல்
  • வயிற்றில் ஏற்படும் வாயுக் கோளாறுகள்
  • ஆஸ்துமா
  • ஒவ்வாமை
  • நரம்புக்கோளாறுகள்