PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ISI
shutterstock_2128623695.jpg
ISI முத்திரை
 
இது இந்திய தரக்கட்டுபாடு நிறுவனம் என்று அழைக்கப்படும். இந்த நிறுவனம்  \(BIS\) (Bureau of Indian Standard) என்றும் அழைக்கப்படும்.
 
தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மின் பொருட்களுக்கு சான்று அளிக்கின்றது.
  • சுவிட்சுகள்
  • கேபிள் ஒயர்கள்
  • நீர் சூடேற்றி
  • மின்சார மோட்டார்
  • சமையலறையில் பயன்படுத்தும் பொருள்கள்
AGMARK (Agricultural Marketing)
Agmarkgif.gif
AGMARK முத்திரை
 
\(AGMARK\) என்பது வேளாண் பொருட்களின் தரக்குறியீடு ஆகும். \(AGMARK\) சான்றிதழ் வழங்கும் வேளாண் பொருட்களின் பட்டியல் பின்வருமாறு தரப்பட்டு உள்ளது.
  • கால்நடை உற்பத்திப் பொருள்கள் 
  • தானியங்கள்
  • விவசாய உற்பத்தி பொருள்கள்
  • அத்தியாவசிய எண்ணெய்கள்
  • பருப்பு வகைகள்
  • தேன்
  • வெண்ணெய்
FPO - கனி உற்பத்தி பொருட்களின் ஆணையம்
FPOmark3jpg.jpg
FPO முத்திரை
 
கனிகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களுக்கு சான்று அளிக்கின்றது. அந்த உணவு பொருட்களின் பட்டியல் பின்வருமாறு காணலாம்.
  • பழரசம்
  • ஜாம்
  • சாஸ் 
  • பதப்படுதப்பட்ட கனிகள்  
  • பதப்படுதப்பட்ட காய்கறிகள்
  • ஊறுகாய்கள்
FSSAI - இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்
shutterstock_1675381141.jpg
FSSAI முத்திரை
 
\(FSSAI\) நிறுவனத்தின் பணிகள் பின்னே வரிசைபடுத்தப்பட்டு உள்ளன.
  • பொதுமக்களின் சுகாதாரம் பாதுகாத்தல்
  • பொதுமக்களின் சுகாதாரம் மேம்படுத்துதல்
  • உணவு பொருட்களின் பாதுகாப்பை கண்காணித்தல்
  • உணவு பொருட்களின் பாதுகாப்பை ஒழுங்குபடுத்துதல்