PDF chapter test TRY NOW

  1. உயிரினங்களை அவற்றில் காணப்படும் ஒற்றுமை, வேறுபாடுகள், மேலும் அவற்றிற்கிடையே உள்ள இனத் தொடர்புகளை அடிப்படையாயகக் கொண்டு குழுக்களாகப் பிரித்தல் வகைப்படுத்துதல் எனப்படும்.
  2. செல், திசு, உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலம் - இவற்றின் அடிப்படையில் விலங்குகளை ஒரு செல் உயிரிகள் என்றும் பலசெல் உயிரிகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
  3. விலங்குகளில் உடலில் உடல் உறுப்புகள் ஒரு மைய அச்சினைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
  4. ஆரச்சமச்சீர் முறை - இந்த முறையில் ஒரு உயிரினத்தின் உடல் உறுப்புகள்மைய அச்சைச் சுற்றிலும் அமைந்துள்ளன.
  5. இருபக்க சமச்சீர் - இந்த முறையில் ஓர் உயிரினத்தின் உடல் உறுப்பு மைய அச்சிற்கு இருபுறமும் அமைந்திருக்கும்.
  6. திரவத்தினால் நிரம்பிய உடல் துளை உடற்குழி எனப்படும். இது உயிரினத்தின் செரிமானப்பகுதியை உடல் சுவரிலிருந்து பிரிக்கின்றது.
  7. உயிரினங்களில் முதுகு நாண் இல்லாத விலங்குகள்முதுகு நாணற்றவை என்றும் அழைக்கப்படுகின்றன. மேலும், முதுகுநாண் உள்ள விலங்குகள் முதுகுநாணுள்ளவை என்றும் அழைக்கப்படுகின்றன.
  8. உயிரினங்களில் முதுகெலும்பிகளின் முன்னோடி முன்முதுகுநாணுள்ளவை ஆகும்