PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வளைதசைப் புழுக்கள் (அன்னலிடா):
 
இவை உண்மையான உடற்குழி (coelom) மற்றும் உறுப்புமண்டலங்களுடைய முதல் உயிரிகளாகும். இருபக்கச் சமச்சீரான மூவடுக்கு உள்ள விலங்குகளாகும்.
 
வளைதசைப் புழுக்களின் உடலில் புறத்தில் மெட்டாமியர்ஸ் என்ற கண்டங்கள் உள்ளன. மேலும், வளையங்கள் போல ஒன்றோடொன்று இணைந்து காணப்படுகின்றன. இந்த அமைப்பு அன்னுலி என்று அழைக்கப்படுகின்றது.
அனேகமான இனங்கள் மூடிய ரத்தச் சுற்றோட்டத்தையும் கொண்டுள்ளன.
 
இடப்பெயர்ச்சி உறுப்புகள் செட்டாக்கள் மற்றும் பாரபோடியாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை இருபால் அல்லது ஒருபால் உள்ள உயிரினங்களாகும்.
Example:
நீரிஸ், மண்புழு, அட்டை
PPT (16).png
வளைதசைப் புழுக்கள்
 
கணுக்காலிகள் (ஆர்த்ரோபோடா):
 
இவையே விலங்குலகின் மிகப் பெரிய தொகுதியாகும். கணுக்காலிகளின் உடலமைப்பு தலை, மார்பு, வயிறு என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  கணுக்காலிகள் இருபக்கச் சமச்சீரான மூவடுக்கு உள்ள விலங்குகளாகும். மேலும் உண்மையான உடற்குழியுள்ள விலங்குகளாகும். இவற்றின் உடல் அமைப்பிலுள்ள ஒவ்வோர் கண்டமும் ஒரு ஜோடி இணைப்புக் கால்கள் உள்ளன.
 
உடலின்  மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது. அது வளரும் போது அதிலுள்ள  புறச்சட்டகத்தின் அளவு மாறுபடுவதில்லை. கணுக்காலிகளில் தோலுரித்தல் (Moulting) எனும் நிகழ்வின் மூலம் இவற்றின் மேற்புற உறையாக உள்ள கைட்டின் உதிர்க்கப்படுகிறது.
 
ஹீமோலிம்ப் என்ற திரவத்தினால் (இரத்தம்) உடற்குழியானது நிரப்பப்பட்டுள்ளது. இவ்வகை உயிரிகளில் வரையறுக்கப்பட்ட இரத்தக் குழல்கள் இல்லை. எனவே, இரத்தம் உடல் முழுவதும் பரவுகிறது. 
 
கழிவு நீக்க உறுப்புகள்:- மால்பீஜியன் குழல்களும், பச்சை சுரப்பிகளும் காணப்படுகின்றன. ஆண், பெண் இரண்டும் தனித்தனி உயிரிகளாக உள்ளன.
Example:
இறால், நண்டு, கரப்பான்பூச்சி
45902849942445fa8221ccw437.jpg
கணுக்காலிகள்
Reference:
Reference: