PDF chapter test TRY NOW

பூமியில் காணப்படும் பல வகையான உயிரினங்களிடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றின் அமைப்பு, வளரியல்பு, வாழுமிடம், உணவு ஊட்ட முறை மற்றும் அவற்றின் செயலியல் ஆகிய பல பண்புகளில் அவை வேறுபடுகின்றன.
 
FotoJet (1).png
உயிரினங்களின் வகைப்பாடு

இப்பூமியில் \(10\) முதல் \(40\) மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் \(1.7\) மில்லியன் உயிரினங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் \(750,000\) பூச்சிகளும், \(250,000\) பூக்கும் தாவரங்களும், \(47,000\) முதுகெலும்புப் பிராணிகளும் அடங்கும்.
 
வகைபாட்டின் இன்றியமையாமை:
 
எவரொருவரும் அனைத்து உயிரினங்களையும் அறிய இயலாது. ஆனால் இவ்வுயிரினங்களை ஒரு குறிப்பிட்ட வசதியான முறையில் குழுக்களாகப் பிரித்து ஆராய்ந்தால் அவற்றைப் பற்றி அறிவது எளிதாகின்றது. ஏனெனில் ஒரு குழு அல்லது ஒரு குடும்பத்தின் பண்பு அக்குழுவில் உள்ள அனைத்து தனிப்பட்ட உயிரினங்களுக்கும் பொருந்தும்.
வகைபாட்டியல்
உயிரினங்களை இனம் கண்டறிதல், பெயரிடுதல் மற்றும் அவற்றினிடையேக் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளின் அடிப்படையில் அவைகளை வகைபடுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய உயிரியலின் ஒரு பிரிவே வகைபாட்டியல் எனப்படும்.
R.H. விட்டேக்கர் (R.H. Whittaker - \(1969\)) என்ற அமெரிக்க வகைபாட்டியல் நிபுணர் அனைத்து உயிரினங்களையும் அவற்றிற்கிடையேக் காணப்படும் பரிணாமத் தொடர்பின் அடிப்படையில் ஐந்து உலகங்களாக வகைபடுத்தினார். இவ்வகைபாடு கீழ்க்கண்ட முக்கிய பண்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
 
220px-Whittaker-Robert-H-1920-1980.jpg
R.H. விட்டேக்கர்
  • செல்லின் அமைப்புகள் இருவகைப்படும். அவை புரோகேரியோட் அல்லது யூகேரியோட் ஆகியவையாகும்.
  • உணவூட்ட முறை தற்சார்பு ஊட்டமுறை அல்லது பிற ஊட்ட முறை என்று அழைக்கப்படுகின்றது.
  • ஒரு செல்லால் ஆனது அல்லது பல செல்களால் ஆனது உடல் அமைப்பு ஆகும்.
  • குழுமப் பரிணாமத் தொடர்பு என்றும் அழைக்கப்படும்.
Reference:
Reference: