PDF chapter test TRY NOW

முதுகு நாண் குறித்த தகவல்களை நாம் இதற்கு முந்தைய பகுதியில் கண்டோம். தற்போது முதுகெலும்புத் தொடர் இல்லாத உயிரினங்கள் குறித்து விரிவாக காணலாம். பின்னே கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளில் முதுகெலும்புத் தொடர் காணப்படுவதில்லை.
 
  • துளையுடலிகள்
  • குழியுடலிகள்
  • தட்டைப் புழுக்கள்
  • உருளைப் புழுக்கள்
  • வளைதசைப் புழுக்கள்
  • கணுக்காலிகள்
  • மெல்லுடலிகள்
  • முட்தோலிகள்
  • அரைநாணிகள்
 
துளையுடலிகள் (போரிபெரா): 
 
பல செல்களைக் கொண்ட ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு நகர முடியாத இயங்கும் தன்மையற்ற நீர் வாழ் உயிரிகள் துளையுடலிகள் என்று அழைக்கப்படும்.
இவ்வகை உயிரினங்களின் உடல் முழுவதும் ஆஸ்டியா  (Ostia) எனப்படும் எண்ணற்ற துளைகளால் ஆனது. அத்துளைகள் மூலம் நீரானது உள்புகுந்து நீரோட்ட மண்டலத்தை அடைகின்றது. ஆஸ்டியா வழியாக உணவு மற்றும் ஆக்ஸிஜன் இவ்வகை உயிரினங்களின் உடல் முழுவதும் சுழற்சி அடைகின்றன. 
  
உடல் சுவர் சட்டக அமைப்பை உருவாக்கும் ஸ்பிக்யூல்ஸ் (Spicules) என்னும் நுண்முட்களைக் கொண்டுள்ளது. பாலின மற்றும் பாலிலா முறைகளில் இவ்வகை உயிரினங்கள்
இனப்பெருக்கம் செய்கின்றன. 
Example:
யூபிலெக்டெல்லா, சைகான்.
FotoJet2w400.png
துளையுடலிகள்
  
குழியுடலிகள்  (சீலென்டிரேட்டா அல்லது நிடேரியா):
 
குழியுடலிகள் எனப்படுபவை கடல் மற்றும் சில நன்னீர் நிலைகளில் வாழும் உயிரினங்கள் ஆகும்.
இவை பல செல், திசு அளவிலான கட்டமைப்பு மற்றும் ஆரச் சமச்சீர் அமைப்பு பெற்ற உயிரினங்களாகும். குழியுடலிகளின் உடல் சுவர் புற அடுக்கு (ectoderm), அக அடுக்கு (endoderm) என இரு அடுக்குகளாலானது .இவ்விரு அடுக்குகளுக்கிடையே மீசோகிளியா எனும் அடர் கூழ்மப்பொருள் உள்ளது. இவ்வுயிரிகளின் உடலமைப்பில் உள்ள சீலண்டிரான் என்னும் வயிற்றுக் குழி வாய் துவாரத்தின் மூலம் வெளித் தொடர்பு கொண்டுள்ளது.
 
குழியுடலிகளின் வாயைச் சுற்றி சிறிய உணர் நீட்சிகள் உள்ளன. கொட்டும் செல்கள் அல்லது நிமெட்டோசிஸ்ட்கள் புறப்படையில் அமைந்துள்ளன. ஒத்த தொகுதியைச் சேர்ந்த பல உயிரின அமைப்பிலும் அவற்றிலும் பணியிலும் ஏற்படும் மாற்றமான பல்லுருவ அமைப்பை உடையவை குழியுடலிகளாகும்.   இவற்றின் இனப்பெருக்கமானது பாலின மற்றும் பாலிலா முறை என இருவகைகளில் நடைபெறுகின்றது.
Example:
ஹைட்ரா, ஜெல்லி மீன்
FotoJet3w400.png
குழியுடலிகள்
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/8/82/Sycon_sp.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6b/Sponges_at_SAS_Transvaal_DSC09129.JPG/512px-Sponges_at_SAS_Transvaal_DSC09129.JPG
https://www.flickr.com/photos/noaaphotolib/9734258717
https://upload.wikimedia.org/wikipedia/commons/0/0b/Spongillidae_middle.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/71/Pagurus_prideaux.jpg/512px-Pagurus_prideaux.jpg
https://www.flickr.com/photos/usfwspacific/5565696408
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/Mikrofoto.de-Hydra_15.jpg/512px-Mikrofoto.de-Hydra_15.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/Aurelia_aurita_2.jpg/512px-Aurelia_aurita_2.jpg
https://www.flickr.com/photos/volvob12b/14231557292
https://www.flickr.com/photos/carolinabio/8225394736