PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முதுகு நாணுள்ள உயிரினங்களின் சிறப்பம்சங்கள் பின்னே வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
  • முதுகுநாண்
  • முதுகுப்புற நரம்புவடம்
  • இணை செவுள் பைகள்
  • நீண்ட, கோல் போன்ற முதுகுநாண் முதுகுப்புறத்தை தாங்கியுள்ளன.
  • மூவடுக்கு மற்றும் உண்மையான உடற்குழி கொண்ட உயிரினங்கள்.
முதுகுநாணுள்ளவை, இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
  • முன்முதுகு நாணிகள்
  • முதுகெலும்புள்ளவைகள்
முன்முதுகுநாணுள்ளவை (Prochordata):
 
முதுகெலும்பிகளின் முன்னோடிகளாகக் கருதப்படுபவை முன்முதுகு நாணுள்ள உயிரினங்களாகும். இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் ஏகிரேனியா (மண்டையோடற்றவை) என்றழைக்கப்படுகின்றன.
  
முன்முதுகு நாணுள்ள உயிரிகள் இரண்டு துணை தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு,
  1. வால் முதுகுநாணிகள் (யூரோ கார்டேட்டா)
  2. தலை முதுகுநாணிகள்  (செபாலோ கார்டேட்டா)
வால்முதுகுநாணிகள் (யூரோ கார்டேட்டா):
 
இது ஒரு துணைத் தொகுதியாகும். வால் முதுகுநாணிகளின் லார்வாவின் வால் பகுதியில் முதுகுநாண்கள் காணப்படுகின்றன. இவற்றில் டியூனிக் என்னும் உறை உடலைச் சுற்றிலும் இருக்கின்றது. முதிர்ந்த உயிரிகள் தங்களின் இயல்பான அமைப்பை இழந்து தரையோடு தரையாக இணைந்து வாழ்பவையாகும்.
Example:
அசிடியன்
Ascidians.jpg
முன்முதுகுநாணுள்ளவை
  
தலைமுதுகுநாணிகள் (செபாலோ கார்டேட்டா):
 
தலைமுதுகுநாணிகளும் துணைத் தொகுதியைச் சேர்ந்த உயிரினங்களாகும். இவை மீன் வடிவத்தில் உள்ள கடல் வாழ் முதுகு நாணிகளாகும். இவற்றின் முக்கியப் பண்புகளுள் ஒன்று தலை முதல் வால் வரை உள்ள நீண்ட நிலையான முதுகுநாண் ஆகும். இவற்றின் முதுகுப்புறத்தில் இணையற்ற துடுப்பு உள்ளது.
Example:
ஆம்பியாக்ஸிஸ்
BeFunky-collage (2).png
தலைமுதுகு நாணிகள்
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/9/93/Ascidians.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/54/Amphioxus.png/1024px-Amphioxus.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Amphioxus_whole.jpg/1024px-Amphioxus_whole.jpg