PDF chapter test TRY NOW

முழு எண்களை மீண்டும் ஒருங்கிணைப்பது தொகையின் மதிப்பையோ அல்லது முடிவின் மதிப்பையோ மாற்றாது. இது சேர்ப்பு பண்பு என்று அழைக்கப்படுகிறது.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முழு எண்களைச் சேர்க்கும் போது, ​​முழு எண்களின் குழுவில் ஏற்படும் மாற்றம் முடிவை மாற்றாது.
\(a\) \(b\) மற்றும் \(c\) ஆகியவை மூன்று முழு எண்களாகும்.

a+ ( b+c   ( a+b )+c
Example:
i) 3+(7+1) = (3+7)+1
 
ii) 9+(10+5)=(9+10)+5
நீங்கள் உணவகதிற்கு சென்று \(4\) வடை, \(3\) சமோசா மற்றும் \(2\) பிஸ்கட் சாப்பிட்டதாகக் கருதுங்கள்.
 
நீங்கள் சாப்பிட்ட மொத்த தின்பண்டங்களின் எண்ணிக்கை என்ன என்பதை இப்போது கண்டுபிடிக்க முடியுமா?
 
இதை இரண்டு முறைகளால் கணக்கிடலாம்.
 
முதலில், \(4\) வடை \(+ 3\) சமோசா \(+ 2\) பிஸ்கட்களை சாப்பிட்டீர்கள், அது \(= 9\) உணவுப் பொருட்களைத் தருகிறது.
 
இரண்டாவதாக, நீங்கள் \(2\) பிஸ்கட் \(+ 3\) சமோசா \(+ 4\) வடை சாப்பிட்டீர்கள், இது \(= 9\) உணவுப் பொருட்களையும் தருகிறது என்பதையும் கணக்கிடலாம்.
 
எனவே இரண்டு வழிகளிலும், முடிவு ஒரே மாதிரியாக இருக்கும்.
 
இவ்வாறு கூட்டல் செயல்பாடு சேர்ப்பு பண்பை திருப்திப்படுத்துகிறது.