PDF chapter test TRY NOW

1. \(A\) யிலிருந்து \(M\) வரையிலான ஆங்கில எழுத்துகள், முறையே \(1\) லிருந்து \(13\) வரையான எண்களைக் குறிக்கின்றன; \(N\) என்பது \(0\) ஐக் குறிக்கிறது; \(O\) விலிருந்து \(Z\) வரையான ஆங்கில எழுத்துகள் முறையே \((−1)\) லிருந்து \((−12)\) வரையிலான எண்களைக் குறிக்கின்றன என்க. பின்வரும் ஆங்கில வார்த்தைகளுக்கான முழுக்களின் கூடுதலைக் காண்க.
 
உதாரணமாக, \(\text{MATH}\)→கூட்டல் பலன் →\(13+1–6+8 = 16\)
 
(i) YOUR NAME  \(=\)
 
(ii) SUCCESS \(=\)
 
 
2. ஒரு நீர்த்தொட்டியிலிருந்து, ஒவ்வொரு நாளும் \(100\) லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது நீர்த்தொட்டியில் \(2000\)\(\text{லி}\). தண்ணீர் உள்ளது. எனில், \(10\) நாள்களுக்கு முன்பு தொட்டியிலிருந்த நீரின் அளவினைக் கணக்கிடுக. \(=\) \(x\) \(=\) .
 
 
3. ஒரு நாள் தண்ணீர் குடிப்பதற்காக, ஒரு கிணற்றின் படிக்கட்டுகளில் நாய் தாவிக் குதித்துக் கீழிறங்கியது. ஒரு தாவலில், \(4\) படிக்கட்டுகளைக் கடந்தது. அந்தக் கிணற்றின் நீர்மட்டத்தை அடைய \(20\)படிகள் இருந்தால், அந்த நாய் எத்தனை முறை தாவிக்குதித்து நீரை அடைந்திருக்கும்?
\(=\) \(x\) \(=\) .
 
 
4. கண்ணன் ஒரு பழ வணிகர். அவர் ஒரு பழத்திற்கு  \(₹2\) வீதம் நட்டத்தில், \(1\)டஜன் வாழைப் பழங்களை விற்றால், அவரது இழப்புத் தொகையைக் கணக்கிடுக. \(=\)  
 
 
5. ஒரு நீர்மூழ்கிக் கப்பல், கடல் மட்டத்திலிருந்து \(650\) அடி ஆழத்தில் உள்ளது. அது \(200\) அடி கீழிறங்கினால், அது இருக்கும் ஆழத்தைக் காண்க. \(=\)  அடி.
 
 
6. கீழ்க்காணும் மாயச் சதுரத்தில் நிரை, நிரல் மற்றும் மூலைவிட்டத்தில் உள்ள எண்களின் கூடுதல் சமம் எனில், \(x\), \(y\) மற்றும் \(z\) இன் மதிப்புகளைக் காண்க.
 
\(1\) \(-10\)\(x\)
\(y\)\(-3\)\(-2\)
\(-6\)\(4\)\(z\)   
 
\(x\) \(=\) , \(y\) \(=\)  ,\(z\)