PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
 முழு எண்கள் மற்றும் அதன் பண்புகள் பற்றி நாம் கற்றுக்கொண்டவற்றை நினைவுபடுத்துவோம்.  
முழு எண்கள்
முழு எண்கள் என்பவை நேர்மறை மற்றும் எதிர்மறை எண்கள் மற்றும் சுழியத்தின் தொகுப்பாகும். இவை எதிர்மறை எண்களைக் கொண்ட முழு எண் தொகுப்பு ஆகும்.
Mathematics20210929T155819658w500 (1).png  
1. \(−1\), \(−100\), \(−999\), \(−9898\) ஆகியவை எதிர்மறை எண்கள் ஆகும். இவை எண் கோட்டில் பூஜ்ஜியத்தின் இடது பக்கத்தில் அமையும்.  
 
2. \(2\), \(90\), \(888\), \(8576\) ஆகியவை நேர்மறை எண்கள் ஆகும். இவை எண் கோட்டில் பூஜ்ஜியத்தின் வலது பக்கத்தில் அமையும்.  
 
3. பூஜ்ஜியம் எதிர்மறை எண்ணும் அல்ல. நேர்மறை எண்ணும் அல்ல. ஆகவே பூச்சியம் எண் கோட்டின் நடுவில் அமையும்.
எண் கோட்டில் முழு எண்களைக் குறிப்பிடும் முறை:
  • எண் கோட்டில் உள்ள நேர்மறை முழு எண்களை, பூச்சியத்துக்கு வலது பக்கமாக அதன் மதிப்பை நகர்த்தி குறிப்பிடலாம்.
  • எண் கோட்டில் உள்ள எதிர்மறை முழு எண்களை, பூச்சியத்துக்கு இடது பக்கமாக அதன் மதிப்பை நகர்த்தி குறிப்பிடலாம்.
1. எண் கோட்டில் \(−3\) ஐக் குறிக்க, நாம் பூச்சியத்தின் இடது பக்கம்  \(3\) புள்ளிகளை நகர்த்த வேண்டும். 
Numberline2w658.png
 
  2.எண் கோட்டில் \(4\) ஐக் குறிக்க, நாம் \(4\) புள்ளிகளை பூச்சியத்தின் வலது பக்கம் நகர்த்த வேண்டும்
 
Numberline3w658.png
 
3. எண் வரியைப் பயன்படுத்தி, முழு எண் \(−2\) ஐ விட \(3\) அலகு அதிகமான எண்ணை எழுதவும்.    
 \(−2\) இலிருந்து, \(3\) அலகுகளை \(−2\) இன் வலது பக்கம் நகர்த்தவும்.
numberlinew658.png
 
4. \(−1\)க்கு எதிர் திசைகயில் \(2\) அலகுகள் தொலைவில், எண் கோட்டில் உள்ள எண்களைக் கண்டறியவும்.  
  
படி 1: இங்கே, \(−1\) என்பது நடுத்தர இலக்கமாகும். இப்பொழுது, \(2\) அலகுகள் \(−1\)க்கு இடப்புறமாக நகர்த்தவும்.  
 
படி 2: இப்போது, \(2\) அலகுகளை \(−1\) இன் வலது பக்கம் நகர்த்தவும். 
numberlinew658.png
 
எனவே, தேவையான முழுஎண்கள் \(3\) மற்றும் \(−1\).
 
Important!
எண் \(−1\) ஆனது மிகப்பெரிய எதிர்மறை முழு எண் ஆகும்.
 
கீழே உள்ள அட்டவணை மூலம் முழு எண்களின் அனைத்து பண்புகளையும் கணித செயல்பாடுகளையும் அறியலாம்:
  
வ.எண்
பண்பு
கூட்டல்
கழித்தல்
பெருக்கல்
வகுத்தல்
1பரிமாற்றுப் பண்புஆம்இல்லைஆம்இல்லை
2சோ்ப்புப் பண்புஆம்இல்லைஆம்இல்லை
3அடைவுப் பண்புஆம்இல்லைஆம்இல்லை
4சமனிப் பண்புஆம்ஆம்ஆம்ஆம்