PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஒரு கதிரொளி மறைப்பான் (sunshade) இருசமபக்கச் சரிவக வடிவில் உள்ளது. அதன் இணைப்பக்க அளவுகள் முறையே \(81\)  \(\text{செ.மீ.}\) மற்றும் \(64\)  \(\text{செ.மீ.}\) அதன் உயரம் \(6\)  \(\text{செ.மீ.}\) எனில், அப்பரப்பை வண்ணமிட ஒரு  \(\text{ச.செ.மீ.}\) க்கு \(₹2\) வீதம் ஆகும் செலவைக் காண்க.
  
பரப்பை வண்ணமிட ஆகும் செலவு \(=\) \(₹\).
 
2. ஒரு சரிவக வடிவச் சாளரத்தின் இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே, \(105\) \(\text{செ.மீ.}\) மற்றும் \(50\) \(\text{செ.மீ.}\) மேலும் இணைப்பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு \(60\) \(\text{செ.மீ.}\) எனில் அந்தச் சாளரத்துக்கு \(100\) \(\text{ச.செ.மீ.}\) க்கு \(₹15\) வீதம் கண்ணாடி அமைக்க ஆகும் மொத்தச் செலவைக் காண்க.
  
கண்ணாடி அமைக்க ஆகும் மொத்தச் செலவு \(=\) \(₹\).
 
3. ஓர் இருசமபக்கச் சரிவகம் வடிவில் உள்ள மைதானத்தின் இணைப்பக்கங்கள் \(42\) \(\text{மீ}\) மற்றும் \(36\) \(\text{மீ}\). இணைப்பக்கங்களுக்கு இடையேயுள்ள தொலைவு (உயரம்) \(30\) \(\text{மீ}\) எனில், அந்த மைதானத்தைச் சமப்படுத்த ஒரு \(\text{ச.மீ.}\)க்கு \(₹135\) வீதம் எவ்வளவு செலவு ஆகும்?
 
மைதானத்தைச் சமப்படுத்த ஆகும் செலவு \(=\) \(₹\).