PDF chapter test TRY NOW

சென்னை மாநகராட்சி குழந்தைகளுக்கு வட்ட வடிவில் புதிய பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது. பாதுகாப்புக்காக, பூங்காவைச் சுற்றி சுவர் எழுப்பவும் திட்டமிட்டனர். ஆனால் சுவர் கட்ட, முதலில், அவர்கள் சுவரின் நீளத்தை அறிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால் சுவரின் நீளத்தை எப்படிக் கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் கேள்வி.
 
shutterstock_1092803204.jpg
 
அதற்க்கான பதில்  "சுற்றளவு".

வட்டத்தின் சுற்றளவு காண்பதன் மூலம் சுவரின் நீளம் அறியலாம்.

வட்டத்தின் சுற்றளவை எப்படி காண்பது எனப் பார்க்கலாம்.
 
சுற்றளவு \(=\) π×d
 
இங்கு, \(d\) என்பது வட்டத்தின் விட்டம் அதாவது ஆரத்தின் இருமடங்கு ஆகும்.
 
வட்டத்தின் சுற்றளவு\(=\) π×2r. இங்கு,  π=227 அல்லது \(3.14\)
4384_Measurements_03.png