PDF chapter test TRY NOW

ஒரே அடுக்கு மற்றும் வெவ்வேறான அடிமானங்களைக் கொண்ட அடுக்கு எண்களைப் பற்றி பார்க்கலாம்:
ஒரே அடுக்கு மற்றும் வெவ்வேறான அடிமானங்களைக் கொண்ட அடுக்கு எண்களின் பெருக்கல்:
 
\(a\) மற்றும் \(b\) என்னும் இரு பூச்சியமற்ற முழுக்கள் மற்றும் \(m\) என்பது முழு எண் எனில், \(a^m \times b^m=(ab)^m\) ஆகும்.
Example:
\(2^2 \times 3^2 =4 \times 9=36\)
 
இதைபோல், \((2 \times 3)^2=6^2=36\)
ஒரே அடுக்கு மற்றும் வெவ்வேறு அடிமானங்களைக் கொண்ட அடுக்கு எண்களின் வகுத்தல்:
 
\(a\) மற்றும் \(b\) என்னும் இரு பூச்சியமற்ற முழுக்கள் மற்றும் \(m\) என்பது முழு எண் எனில், \(\frac{a^m}{b^m}=(\frac{a}{b})^m\) ஆகும்.
Example:
\(\frac{4^{2}}{2^{2}}=\frac{16}{4}=4\)
 
இதைபோல், \((\frac{4}{2})^2=2^2=4\)
Important!
எந்த ஒரு முழு எண்ணின் அடுக்கு பூச்சியம் என்றாலும் அதன் மதிப்பு \(1\) ஆகும்.
 
அதாவது, \(a\) என்பது ஒரு முழு எண் எனில், \(a^0=1\)