PDF chapter test TRY NOW

கோணங்கள்:
ஒரு பொதுவான புள்ளியைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு கதிர்களால் உருவான உருவம் கோணம் எனப்படும்.
ஒரு கோணத்தினை அமைக்கும் கதிர்கள் அக்கோணத்தின் கைகள் எனப்படும். பொதுப்புள்ளியானது அக்கோணத்தின் முனை எனப்படும்.
கோணங்களின் வகைகள்:
குறுங்கோணம்\(90^\circ\) கோணத்தை விடக் குறைவாக உள்ள கோணம் குறுங்கோணம் என அழைக்கப்படுகிறது.B2w994.png
செங்கோணம்சரியாக \(90^\circ\) அளவுள்ள கோணம் செங்கோணம் என அழைக்கப்படுகிறது.B3w663.png
விரிகோணம்\(90^\circ\) கோணத்தை விட அதிகமாக உள்ள கோணம் விரிகோணம் என அழைக்கப்படுகிறது.B4.png
நேர்கோணம்சரியாக \(180^\circ\) அளவுள்ள கோணம்
நேர்கோணம் எனப்படும்.
6.3 Ресурс 2-w1500.png
பின்வளைகோணம்கோண அளவு \(180^\circ\) இக்கு மேல் \(360^\circ\) இக்குள் இருந்தால் அது பின்வளைகோணம்
என்று அழைக்கப்படும்.
6.5 Ресурс 2-w1135.png
 
நிரப்பு கோணங்கள்:
 
இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை \(90^\circ\) எனில் அக்கோணங்கள் நிரப்புக் கோணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
7.1 Ресурс 2-w674.png
 
மிகை நிரப்புகோணங்கள்:
 
இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை \(180^\circ\) எனில் அக்கோணங்கள் மிகை நிரப்புக் கோணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
7.2 Ресурс 1-w1143.png