PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பொதுமைய வட்டங்கள்:
ஒரு மையத்தில் இருந்து வரையப்படும் வட்டங்கள் பொது மைய வட்டங்கள் எனப்படும்.
வட்ட வளையம்:
இரண்டு வட்டங்களுக்கும் இடைப்பட்ட பகுதி வட்ட வளையம் எனப்படும்.
YCIND_221026_4603_TM7_Geometric transformation_Tamil medium_16.png
 
வட்ட வளையத்தின் அகலம்:
 
வட்ட வளையத்தின் அகலமானது வெளி வட்ட ஆரம் மற்றும் உள் வட்ட ஆரத்தின் வேறுபாடு ஆகும்.
 
\(\text{வட்ட வளையத்தின் அகலம்}\) \(=\) \(\text{வெளிவட்ட ஆரம்}\) \(-\) \(\text{உள்வட்ட ஆரம்}\)
 
Example:
\(3\) செ.மீ மற்றும் \(7\) செ.மீ ஆரமுள்ள பொதுமைய வட்டம் வரைந்து வட்ட வளையத்தின் அகலம் காண்க.
 
வரைமுறை:
 
படி 1 : உதவிப்படம் வரைந்து கொடுக்கப்பட்ட அளவுகளைக் குறிக்கவும்.
 
படி 2 : தளத்தில் ஏதேனும் ஒரு புள்ளியைக் குறித்து வட்டத்தின் மையம் \(O\) எனப் பெயரிடுக.
 
படி 3 : \(O\) வை மையமாகக் கொண்டு \(3\) செ.மீ ஆரமுள்ள வட்டத்தை வரைக.
 
YCIND_221026_4603_TM7_Geometric transformation_Tamil medium_18.png
 
படி 4 : மீண்டும் \(O\) வை மையமாகக் கொண்டு \(7\) செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக. இவ்வாறு \(C_1\) மற்றும் \(C_2\) என்ற இரு பொது மைய வட்டங்கள் வரையப்பட்டன.
 
YCIND_221026_4603_TM7_Geometric transformation_Tamil medium_19.png
 
வட்ட வளையத்தின் அகலம் காணுதல்:
 
\(\text{வட்ட வளையத்தின் அகலம்}\) \(=\) \(\text{வெளிவட்ட ஆரம்}\) \(-\) \(\text{உள்வட்ட ஆரம்}\)
 
\(=\) \(7\) \(-\) \(3\)
 
\(=\) \(4\) செ.மீ.