PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(100 \ \text{மீ}\) ஓட்டம் மற்றும் \(4 \times 100 \ \text{மீ}\) தொடர் ஓட்டம் போன்ற தடகளப் போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியிலும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற கள விளையாட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியிலும் மாணவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமெனில் விளையாட்டு நாளன்று நடைபெறும் இப்போட்டிகளில் கலந்து கொள்ள ஒரு மாணவருக்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
 
ஒரு மாணவர் கலந்து கொள்வதற்கான வழிகள் \(=\)
 
 
2. கொடுக்கப்பட்டுள்ள சுழல் சக்கரத்தினை இருமுறை சுழற்றும் போது கிடைக்கும் எண்களைக் கொண்டு இரண்டிலக்க எண்களை அமைத்தால் எத்தனை விதமான இரண்டிலக்க எண்களை அமைக்க முடியும்?
(குறிப்பு: இலக்கங்களை மறுமுறையும் பயன்படுத்த இயலாது)
 
A_17.png
 
இரண்டிலக்க எங்களை அமைக்கும் வழிகள் \(=\)
 
 
3. ஒரு மேல்நிலைப் பள்ளியில் பதினோறாம் வகுப்பில் கீழ்வரும் \(3\) பிரிவுகள் உள்ளன.
I. அறிவியல் பிரிவு
     I. இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம்
     II. இயற்பியல், வேதியியல் , கணிதம் மற்றும் கணிணி அறிவியல்
     III. இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் மனையியல்
II. கலைப் பிரிவு
     I. கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளாதாரம் மற்றும் வணிக கணிதம்
     II. கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளாதாரம் மற்றும் கணிணி அறிவியல்
     III. வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகவியல்
III. தொழில்கல்வி பிரிவு
     I. உயிரியல், கருத்தியல் செய்முறை I மற்றும் செய்முறை II
     II. மனையியல், ஆடை அலங்காரம், கருத்தியல் செய்முறை I மற்றும் செய்முறை II
உள்ளது எனில், ஒரு மாணவர் தனக்கு வேண்டியப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது?
  
மொத்த வாய்ப்புகள் \(=\)