PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி  வர்க்க மூலம் கண்டு அறியலாம் : 
 
படி 1. கொடுக்கப்பட்டுள்ள இயல் எண்ணை பகா காரணிகளின் பெருக்கல்களாக எழுத வேண்டும்.
 
படி 2. இப்பொழுது காரணிகளை இரண்டு சோடிகளாக அமைக்க வேண்டும் அப்பொழுது இரண்டு சோடிகளின் காரணிகளும் சமமாக இருக்கும்.
 
படி 3. அடுத்து எதாவது காரணிகள் விடுபட்டிருக்க என்று பார்க்க வேண்டும் .சோடிகள் சேர்க்கும்பொழுது எந்த காரணிகளும் விடு பட வில்லை என்றால் அதனை நாம் முழு வர்க்க எண்கள் என்று கூற முடியும்.
  
படி 4. நமக்கு கிடைத்த பகா காரணிகளில் இருந்து எதாவது ஒரு காரணியை எடுத்து பெருக்கிப்பார்த்தல் நமக்கு ஒரு எண் கிடைக்கும் அந்த என்னுடைய வர்க்க எண்ணே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள எண் ஆகும்.
Example:
எண் \(\sqrt{324}\).
 
\(\sqrt{324}\) என்ற எண்ணின் வர்க்கமூலம் காண்க.
 
படி 1: \(324\) என்ற எண்ணை பகா காரணிகளின் பெருகல்களாக எழுத வேண்டும்.
 
2|324¯2|162¯3|81¯3|27¯3|9¯3|3¯|1
 
\(324 = 2 \times 2 \times 3 \times 3 \times 3 \times 3\)
 
படி 2:இப்பொழுது அதனை சரியான பகா காரணிகளோடு சேர்த்து எழுத வேண்டும் 
 
\(324 = (2 \times 2) \times (3 \times 3) \times (3 \times 3)\)
 
படி 3:அப்படி சேர்த்து எழுதும்போது எந்த காரணிகளும் மீதமில்லை
 
எனவே கொடுக்கப்பட்டுள்ள எண் ஒரு முழு வர்க்க எண் ஆகும்.
 
படி 4:நமக்கு கிடைத்த பகா காரணிகளில் இருந்து எதாவது ஒரு காரணியை எடுத்து பெருக்கிப்பார்த்தல் ஒரு எண் கிடைக்கும் அந்த என்னுடைய வர்க்க எண்ணே கொடுக்கப்பட்டுள்ள எண் ஆகும்
 
\(\sqrt{324}\) \(=\) \(2 \times 3 \times 3\)
 
\(\sqrt{324}\) \(=\) \(18\)
 
எண் \(\sqrt{324}\) வர்க்க மூலம் \(18\) ஆகும்.